Aran Sei

உ.பி.: பத்திரிகையாளர் சித்திக் கப்பனின் பிணை மனுவை நிராகரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம்

ட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ்கைது  செய்யப்பட்டுள்ள பத்திரிக்கையாளர் சித்திக் கப்பனின் பிணை  மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி கிருஷ்ணா பஹல் தலைமையிலான ஒற்றை அமர்வு விசாரித்தது.

தேர்தல் கால இலவச வாக்குறுதிகளைக் கட்டுப்படுத்த நிபுனர் குழு – உச்சநீதிமன்றம் பரிந்துரை

டெல்லியில் உள்ள ஒரு மலையாள செய்தி இணையதளத்தில் பணிபுரிந்து வந்த சித்திக் கப்பான், கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி, ஹத்ராஸ் பாலியல் வன்புணர்வு சம்பவத்தைப் பற்றி செய்தி சேகரிப்பதற்காக, உத்தர பிரதேச மாநிலத்துக்குச் சென்றார். அவரை ஹத்ராசுக்குள் நுழைய விடாமல் வழிமறித்த காவல்துறையினர், ”பொது அமைதிக்கு குந்தகம்” விளைவிப்பதாகக் கூறி கைது செய்தனர்.

அவருடன் செய்தி சேகரிக்க சென்ற சக ஊழியர்களான அதிக் உர் ரஹ்மான், மசூத் அகமது ஆலம் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். சித்திக்கினுடைய லேப்டாப், மொபைல் போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

ஆந்திரா: தொழிற்சாலையில் விஷவாயு கசிவு – 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதி

உத்தர பிரதேசத்தில் ஒரு பெரிய சதித் திட்டத்தை அரங்கேற்ற, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பின்னணியில் சித்திக் செயல்பட்டதாக, முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்த மதுரா காவல்துறை, அவர்மீது தேசதுரோக சட்டத்தின் கீழும், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்திருந்தது.

Did Kallakurichi Sakthi School driver blackmailed the girl? Adv Kesavan Interview | New CCTV Footage

உ.பி.: பத்திரிகையாளர் சித்திக் கப்பனின் பிணை மனுவை நிராகரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்