உத்தரபிரதேசத்தில், கடந்த 24 மணி நேரத்தில் அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியவர்கள் என 595 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையால் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களின் எண்ணிக்கை 1,120 ஆக உயர்ந்துள்ளது. போராட்டத்தின் போது பொதுச் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களை, போராட்டக்காரர்களிடம் வசூலிக்கும் வகையில் அதிகாரிகள் மதிப்பீடு செய்து வருகின்றனர்.
போராட்டத்தின் போது பொதுச் சொத்துக்களை சேதப்படுத்திய நபர்களை அடையாளம் கண்டு அவர்களைக் கைது செய்யுமாறு மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் கள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
டெல்லி: 53 கோவில்களை இடிக்க திட்டமிட்டுள்ள ஒன்றிய அரசு முடிவு – ஆம் ஆத்மி உறுப்பினர் குற்றச்சாட்டு
காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) பிரசாந்த் குமார் கூறுகையில், “மாணவர்கள், போராட்டக்காரர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து காவல்துறையினர் அவர்களிடம் கணிவாக நடந்துகொள்வார்கள். ஆனால், ரயில்களை எரிப்பவர்கள், பேருந்துகள், காவல்துறை வாகனங்களை சேதப்படுத்துபவர்கள், கடைகளை சூறையாடும் செயல்களில் ஈடுபட்டவர்கள் சேதத்திற்கு பணம் செலுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
புகைப்படங்கள், காணொளி காட்சிகள் மூலம் இதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை கூடுதல் இயக்குநர் கூறியுள்ளார். பாலியா, வாரணாசி, அலிகார், மதுரா, ஆக்ரா உள்ளிட்ட மாவட்டங்களில் அடையாளம் காணும் பணி ஏற்கனவே நடைபெற்று வருகிறது. “அழிவு, தீ வைப்பு மற்றும் பொது சொத்துக்களை சேதப்படுத்தியவர்கள் மீது மீட்பு அறிவிப்பு விரைவில் வழங்கப்படும்” என்று மற்றொரு மூத்த காவல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசம் – தலித் என்பதால் தாக்கபட்ட ஜொமாட்டோ ஊழியர் – இருவரை கைது செய்துள்ள காவல்துறை
உ.பி. மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (யுபிஎஸ்ஆர்டிசி) தலைமைப் பொது மேலாளர் போராட்டங்களின் போது பேருந்துகளுக்கு ஏற்பட்ட சேதங்களை மாநகராட்சி மதிப்பிடுமாறு கேட்டுக் கொண்டதை உறுதிப்படுத்தினார்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களென இதுவரை நடைபெற்ற மொத்த 1,120 கைது செய்யப்பட்டுள்ளனர். CrPCயின் 151வது பிரிவை மீறியதற்காக 618 பேரும், தீவைப்பு மற்றும் நாசவேலையில் ஈடுபட்டதாக 502 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Source: Thenewindianexpress
Draupadi Murmu | பழங்குடி ஜனாதிபதி | துரோகம் செய்ய ஒரு சாக்கு | Aranse
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.