Aran Sei

வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலையேற்றம்: ’கொரோனாவே காரணம்’ – மத்திய அமைச்சர் விளக்கம்

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உயர்வுக்கு கொரோனா ஊரடங்கும், எண்ணெய் நிறுவனங்களின் உற்பத்தி குறைவும்தான் காரணம் என்று  மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

 இந்தியாவில் எரிபொருள் விலை தொடர்ந்து ஏழாவது நாளாக உயர்ந்துள்ளது. தற்போது டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ .89 ஆகவும், மும்பையில் திருத்தப்பட்ட விலை லிட்டருக்கு ரூ .95.46 ஆகவும் உள்ளது. டெல்லியில் டீசல்  விலை லிட்டருக்கு ரூ.79.35 க்கும் மும்பையில் ரூ 86.34 க்கும் விற்கப்படுகிறது என்று தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

நுகர்வோர் மீதான சுமையைத் குறைக்கும் வகையில் எரிபொருள் மீதான கலால் வரியைக் குறைக்குமாறு அரசுகளிடம் பல எண்ணெய் முகவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுபான்மையினர் ஆணையத்தில் நிரப்பபடாத பணியிடங்கள்: மத்திய அரசு விளக்கமளிக்க டெல்லி உயர்நீதி மன்றம் உத்தரவு

எரிபொருட்களின் விலை ஏற்றம் தொடர்பாக எதிர்க்கட்சிகளிடமிருந்து வரும் எதிர்ப்பை எதிர்கொண்ட மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளால் உருவாக்கப்பட்ட செயற்கை விலை நெறிமுறையைக் குற்றம் சாட்டியுள்ளார்.

எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளிடமிருந்து இந்தியா தனது எரிபொருள் தேவையில் 80 விழுக்காடு பூர்த்தி செய்கிறது என்பதைக் குறிப்பிட்டுள்ள அமைச்சர், கச்சா எண்ணெயின் விலை மீண்டும் உயர்ந்து வருவதால் “விலையில் நாம் சவால்களை எதிர்கொள்கிறோம்” என்று கூறியுள்ளதாக தி வயர் செய்தி பதிவிட்டுள்ளது.

‘தீஷாவை கொலை செய்ய அழைப்பு விடுக்கும் பாஜக அமைச்சர்’ – காஷ்மீர் எழுத்தாளர் அமான் குற்றச்சாட்டு

“கொரோனா ஊரடங்கின் காரணமாக உலகம் முழுவதும் பெட்ரோலியத்திற்கான தேவையில் மொத்தமாகச் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், பெட்ரோலிய உற்பத்தியாளர்கள் உற்பத்தியைக் குறைக்க வேண்டியிருப்பதாகவும்” அமைச்சர் தெரிவித்துள்ளார்.இப்போது பொருளாதாரம் புத்துயிர் பெற்றுள்ளது என்றும் இந்தியா கிட்டத்தட்ட கொரோனாவுக்கு முந்தைய நிலைக்குத் திரும்பியுள்ளது என்றும் தெரிவித்த அவர், எண்ணெய் உற்பத்தியாளர்கள் இன்னும் உற்பத்தியை அதிகரிக்கவில்லை என்று தெரிவித்ததாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“எண்ணெய் வளம் நிறைந்த நாடுகள், நுகர்வு நாடுகளின் தேவையைக் கவனிக்கவில்லை என்பதால் இது ஒரு செயற்கை விலை விலையேற்றமாய் இருக்கிறது. அதனால்தான் நமக்கு இச்சிக்கல் உருவாகியுள்ளது” என்றும் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் கூறியுள்ளார்.

ஓவியாவின் கோபேக் மோடி ஹேஷ்டேக்: தேசதுரோக வழக்கு பதிவு செய்யவேண்டும் – காவல் ஆணையரிடம் புகாரளித்த தமிழக பாஜக

கொரோனா பேரிடர் நிலையும் எண்ணெய் விலை உயர்வுக்குக் காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  “யூனியன் மற்றும் மாநில அரசாங்கங்களின் செலவு அதிகரித்துள்ளது. பட்ஜெட்டில் மூலதன செலவில் 34 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால், நாம் நமது பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்”என்று மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலையேற்றம்: ’கொரோனாவே காரணம்’ – மத்திய அமைச்சர் விளக்கம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்