இரண்டு கொரோனா அலைகளின் போதும் முப்பது லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் இறந்திருக்கலாம் என மதிப்பிட்டு, புகழ்பெற்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வை ஒன்றிய சுகாதார அமைச்சகம் நிராகரித்துள்ளது.
இந்த மதிப்பீடானது அதிகாரப்பூர்வமாக இந்திய அரசு வெளியிட்ட இறப்பு எண்ணிக்கையைவிட ஆறு மடங்கு அதிகமாகும்.
கடந்த வாரம் அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், முதல் இரண்டு கொரோனா அலைகளின் போது இந்தியாவில் உண்மையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 31 லட்சத்தில் தொடங்கி 34 லட்சம் வரை இருந்ததாக மதிப்பிட்டுள்ளது. இதில், சுமார் 27 லட்சம் ஏப்ரல்-ஜூலை காலகட்டத்தில், இரண்டாவது அலை உச்சத்தில் இருக்கும்போது ஏற்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.
டெல்லியில் கணக்கிடாமல் விடப்பட்ட 1150 கொரோனா இறப்புகள் : சுடுகாடுகளில் என்டிடிவி நடத்திய ஆய்வு
இந்நிலையில், நேற்று(ஜனவரி 14), இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஒன்றிய சுகாதார அமைச்சகம், அறிவியல் பத்திரிகையின் அறிக்கையை நிராகரித்துள்ளது.
“உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறையின் அடிப்படையில்தான் கொரோனா இறப்புகள் கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கு மிகவும் விரிவான வரையறைகள் உள்ளன. அனைத்து இறப்புகளும் ஒவ்வொரு மாநிலங்களாலும் சுயாதீனமாக கணக்கிடப்பட்டுள்ளது. அவற்றைதான் ஒன்றிய அரசு தொகுத்துள்ளது” என்று அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வமாக, ஒன்றிய அரசு இதுவரை ஐந்து லட்சத்திற்கும் குறைவான கொரோனா இறப்புகளையே பதிவு செய்துள்ளது என்பதும் அறிவியல் இதழின் மதிப்பீடானது அரசின் எண்ணிக்கையைவிட ஆறு மடங்கு அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Source: New Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.