Aran Sei

நீதிபதிகள் நியமனம் தொடர்பான கொலிஜியம் சிபாரிசுகளை ஒன்றிய அரசு நிலுவையில் வைப்பதை ஏற்க முடியாது – உச்ச நீதிமன்றம் கருத்து

நீதிபதிகள் நியமனம் தொடர்பான கொலிஜியம் சிபாரிசுகள் மீது ஒன்றிய அரசு முடிவெடுக்காமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

நீதிபதிகள் நியமனம் தொடர்பான கொலிஜியம் சிபாரிசுகள் மீது ஒன்றிய அரசு முடிவெடுக்காமல் காலம் தாழ்த்துவதற்கு எதிராக பெங்களூரு வழக்கறிஞர்கள் சங்கம், உச்ச நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தது. அதை நீதிபதிகள் எஸ்.கே.கவுல், அபய் எஸ்.ஒகா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

கொலிஜியம் முறையில் அல்லாமல் ஒன்றிய அரசே நீதிபதிகளை நியமனம் செய்ய வேண்டும் – ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ

மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், “நீதிபதி தீபாங்கர் தத்தாவை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் சிபாரிசு செய்து 5 வாரங்கள் ஆகியும் ஒன்றிய அரசு முடிவெடுக்காமல் உள்ளது. ஒன்றிய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாதிட்டார்.

நீதிபதிகள் நியமனம் தொடர்பான கொலிஜியம் சிபாரிசுகள் மீது ஒன்றிய அரசு முடிவெடுக்காமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. கொலிஜியம் சிபாரிசுகளை ஏற்று நியமன உத்தரவுகளை பிறப்பிக்கவோ, ஆட்சேபனைகளை தெரிவிக்கவோ ஒன்றிய அரசு மறுக்கிறது. இதுவரை 10 நீதிபதிகள் பற்றிய சிபாரிசுகள், ஒன்றிய அரசின் சட்ட அமைச்சகத்திடம் நிலுவையில் உள்ளது. எனவே, இந்த மனு தொடர்பாக பதில் அளிக்க ஒன்றிய அரசின் சட்ட அமைச்சக செயலருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Source : the hindu

அசிங்கப்பட்ட ஆட்டுத்தாடி ஆளுநர் | சனாதன ரவிக்கு ஸ்கெட்ச் போடும் திமுக | Aransei Roast | RN Ravi

நீதிபதிகள் நியமனம் தொடர்பான கொலிஜியம் சிபாரிசுகளை ஒன்றிய அரசு நிலுவையில் வைப்பதை ஏற்க முடியாது – உச்ச நீதிமன்றம் கருத்து

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்