Aran Sei

எதிரிகளை அழிப்பதற்காக ஹிட்லர் கட்டிய நச்சு வாயு அறைகளை மட்டும் தான் ஒன்றிய அரசு இன்னும் கட்டவில்லை: சிவசேனா விமர்சனம்

றைந்த காங்கிரஸ் தலைவர்களான ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ்காந்தி ஆகியோரின் நினைவுகளை அழிக்க பாஜக விரும்புகிறது என்று சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.

சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘சாம்னா’வில் இன்று ஒரு தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. அதில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குநரகம் விசாரித்தது குறித்து ஒன்றிய அரசை கடுமையாக சாட்டியுள்ளது.

ஒன்றிய அரசின் அக்னிபத் திட்டம் நாட்டின் எதிர்காலத்திற்கு அபாயத்தை ஏற்படுத்தும் – அகிலேஷ் யாதவ் எச்சரிக்கை

ராகுல் காந்தியை கேள்வி கேட்பதன் மூலம், “யாருடைய காலரையும் பிடிக்க முடியும்” என்பதை பாஜக காட்ட முயற்சிக்கிறது. இதை அதிகார திமிர் என்று அந்த தலையங்கம் தெரிவித்துள்ளது.

பண்டித நேரு, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ்காந்தி ஆகியோரின் நினைவுகளை அழிக்க பாஜக விரும்புவதோடு மட்டுமல்லாமல், நேரு-காந்தி பரம்பரையையும் அழிக்கவும் விரும்புகிறது. இன்று அது ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி, நாளை அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தன் எதிரிகளை அழிப்பதற்காக ஹிட்லரால் கட்டப்பட்ட நச்சு வாயு அறைகளை உருவாக்குவதை மட்டும்தான் இன்னும் ஒன்றிய அரசு செய்யாமல் உள்ளது. அப்படியானால் எப்படி சமத்துவமான சட்டம் மட்டும் இருக்க முடியும்?” என்று அந்த தலையங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

Source : NDTV

பாஜகவின் கலவரபுத்தி எப்பவுமே மாறாது Dr Sharmila Interview

எதிரிகளை அழிப்பதற்காக ஹிட்லர் கட்டிய நச்சு வாயு அறைகளை மட்டும் தான் ஒன்றிய அரசு இன்னும் கட்டவில்லை: சிவசேனா விமர்சனம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்