Aran Sei

நாகாலாந்தில் மேலும் 6 மாதங்களுக்கு ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் நீட்டிப்பு- ஒன்றிய அரசு அறிவிப்பு

நாகாலாந்தில் டிசம்பர் 4 அன்று இராணுவத்தினரால் 14 பொதுமக்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, வடகிழக்கு மாநிலங்களில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை நீக்கக் கோரி மக்கள் போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், நாகாலாந்தில் மேலும் 6 மாதங்களுக்கு இச்சட்டத்தை ஒன்றிய அரசு நீட்டித்துள்ளது.

இந்த சட்டத்தைத் திரும்பப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய டிசம்பர் 26 அன்று ஒரு உயர்மட்டக் குழுவை அமைத்த நிலையில், நாகாலாந்தில் இன்று (டிசம்பர் 30) மேலும் 6 மாதங்களுக்கு இச்சட்டத்தை ஒன்றிய உள்துறை அமைச்சகம் நீட்டித்துள்ளது. இதற்கு முன்பு கடந்த ஜூன் 30 ஆம் தேதி இங்கு இச்சட்டம் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நாகலாந்து துப்பாக்கிச் சூடு – மேஜர் ஜெனரல் அதிகாரத்தில் உள்ளவர் விசாரிக்க ராணுவ நீதிமன்றம் உத்தரவு

நாகாலாந்து மாநிலத்தில் குழப்பமான மற்றும் ஆபத்தான சூழ்நிலை நிலவுகிறது. அதனால், அங்குள்ள மக்களின் பாதுகாப்புக்கு ஆயுதப்படைகளைப் பயன்படுத்துவது அவசியம்” என்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இச்சட்டத்தின் பிரிவு 4-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, 2021ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி முதல் மேலும் 6 மாத காலத்திற்கு நாகாலாந்து மாநிலம் முழுவதையும் ‘பதற்றம் நிறைந்த பகுதியாக’ ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

ஆர்.என். ரவியை தமிழ்நாட்டிற்கு மாற்றியிருப்பது நாகலாந்திற்கு நிம்மதி – நாகலாந்து தேசியவாத முற்போக்கு கட்சி கருத்து

1958 ஆம் ஆண்டு முதல் வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் அமலில் உள்ளது. ஒன்றிய அரசு பதற்றம் நிறைந்த பகுதியாக அறிவித்துள்ள இடங்களில் ஆயுதக் காவல் படைகளுக்கும் வரம்பற்ற அதிகாரங்களை இச்சட்டம் வழங்குகிறது.

இப்பகுதிகளில் இச்சட்டத்திற்கு எதிராகச் செயல்படும் எவரையும் கொலை செய்யவும், வாரண்ட் இன்றி கைது செய்யவும், எந்த இடத்தை வேண்டுமானாலும் சோதனை செய்யவும் ஆயுதக் காவல் படைகளுக்கு ஒன்றிய அரசு  அதிகாரம் அளித்துள்ளது.

நாகாலாந்தில் மேலும் 6 மாதங்களுக்கு ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் நீட்டிப்பு- ஒன்றிய அரசு அறிவிப்பு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்