அக்னிபத்’ திட்டத்தின் மூலம் ராணுவத்தை ஒன்றிய அரசு பலவீனப்படுத்துகிறது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றதுபோல் போல் அக்னிபத் திட்டத்தையும் திரும்பப் பெற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணையின் போது கட்சித் தொண்டர்கள் ஆதரவளித்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், விசாரணையின்போது தான் தனியாக இல்லை என்றும் ஜனநாயகத்திற்காக போராடும் அனைவரும் தன்னுடன் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்குத் தீங்கு விளைவிப்பதன் மூலம் அரசாங்கம் நாட்டின் முதுகெலும்பை உடைத்துவிட்டது என்று ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஒரு பதவி, ஒரே ஓய்வூதியம்’ என்று பேசிக் கொண்டிருந்த அவர்கள், இப்போது ‘ரேங்க் இல்லை, ஓய்வூதியம் இல்லை’ என்று வந்துள்ளனர். நம் இந்திய மண்ணில் சீன ராணுவம் அமர்ந்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ள அவர், ராணுவத்தை பலப்படுத்துவதற்கு பதிலாக பலவீனப்படுத்துகிறது ஒன்றிய அரசு என்று தெரிவித்துள்ளார்.
चीन की सेना हमारे हिंदुस्तान की धरती पर बैठी है।
प्रधानमंत्री जी, सच्ची देशभक्ति सेना को मज़बूत करने में है लेकिन आप एक 'नए धोखे' से सेना को कमज़ोर कर रहे हैं।
देश के भविष्य को बचाने के इस आंदोलन में, हम युवाओं के साथ हैं।
मैं फिर कह रहा हूं, आपको 'अग्निपथ' वापस लेना ही होगा।
— Rahul Gandhi (@RahulGandhi) June 22, 2022
இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நம் இந்திய மண்ணில் சீன ராணுவம் அமர்ந்திருக்கிறது.
பிரதமரே, உண்மையான தேசபக்தி ராணுவத்தை பலப்படுத்துவதில் உள்ளது, ஆனால் நீங்கள் ஒரு ‘புதிய ஏமாற்று’ மூலம் ராணுவத்தை பலவீனப்படுத்துகிறீர்கள்.
நாட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்றும் இந்த இயக்கத்தில், நாங்கள் இளைஞர்களுடன் இருக்கிறோம். நான் மீண்டும் சொல்கிறேன், நீங்கள் ‘அக்னிபத்தை’ திரும்பப் பெற வேண்டும்” என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
Source: ndtv
Army Man Interview on Agnipath | பாஜக செய்வது தேசபக்தியா தேசத்துரோகமா? | Dr Poovannan
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.