நாட்டில் ஏற்பட்டுள்ள “வேலையில்லா திண்டாட்டத்துக்கு” ஒன்றிய அரசு தான் காரணம் என்றும், அதனால் தற்கொலைகள் அதிகரித்து வருவதாகவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்
கடன் மற்றும் வேலையின்மை காரணமாக 2018 மற்றும் 2020 க்கு இடையில் 25,000 க்கும் அதிகமானோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று அவர் ஒரு ஊடக அறிக்கையை மேற்கோள் காட்டியுள்ளார்.
#KiskeAccheDin ‘ என்ற ஹேஷ்டேக்குடன் இந்தியில் ஒரு ட்வீட்டில், “வேலையின்மையால் தற்கொலைகள் அதிகரித்தன. மேலும் வேலையில்லாத் திண்டாட்டத்தின் அதிகரிப்புக்கு என்ன காரணம்? இந்த வேலையில்லா நெருக்கடிக்கு ஒன்றிய அரசுதான் பொறுப்பு” என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
மாநிலங்களவை உறுப்பினர் மல்லிகார்ஜுனே கார்கே தெரிவிக்கும் போது, வேலையின்மை காரணமாக தற்கொலைகள் இருபத்தி நான்கு சதவீதம் அதிகரித்துள்ளது. எண்பத்தி நான்கு சதவீத குடும்பங்கள் வருமானத்தில் சரிவைக் கண்டுள்ளன. ஆனாலும், (பிரதமர்) மோடியும் அவரது அமைச்சர்களும் இந்த கடினமான காலங்களை ‘அமிர்த காலம்’ என்று அழைக்கின்றனர் என்று விமர்சித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.