ஐடிஐ பயிற்சி பெறும் பயிற்சியாளர்களை கொத்தடிமை கூலித் தொழிலாளர்களாக மாற்றும் எண்ணத்தோடு ஒன்றிய அரசு தற்போது பாடத்திட்டங்களை குறைத்து ஆணை பிறப்பித்துள்ளது” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”ஐடிஐயில் பயிற்சி பெற்றுச் செல்லும் பயிற்சியாளர்கள் தொழில் முனைவோர்களாக, வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்கு செல்பவர்களாக, பொதுத்துறை, அரசுத்துறை மற்றும் தனியார் துறைகளில் சிறந்த தொழிலாளர்களாக பணிபுரியலாம். ஆனால், தற்போது அந்த நோக்கத்தை சிதைக்கும் வகையிலும், எந்த நிபுணத்துவமும் இல்லாமல் வெறும் சொல்வதைச் செய்யும் கூலித் தொழிலாளியாக மட்டுமே பணிபுரியும் வகையிலும், புதிய தொழிற்கல்வி முறையை அமல்படுத்த மத்திய அரசு முயன்று வருகிறது. இத்தகைய நடவடிக்கை, இளைஞர்களுக்கு, வருங்கால தொழிலாளர்களுக்கு எதிரானது ஆகும்.
அதாவது, தற்போது ஐடிஐகளில் பயிற்சி பெற்று செல்லும் பயிற்சியாளர்களுக்கு 12ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும் என ஆணை வழங்கப்பட்ட நிலையில், அதற்கான பாடத்திட்டங்களை அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஐடிஐ பயிற்சி பெறும் பயிற்சியாளர்களை கொத்தடிமை கூலி தொழிலாளர்களாக மாற்றும் எண்ணத்தோடு ஒன்றிய அரசு தற்போது பாடத்திட்டங்களை குறைத்து ஆணை பிறப்பித்துள்ளது.
பாடத்திட்டங்களுக்கான கால அளவு குறைக்கப்பட்டதோடு, அத்தியாவசிய பாடத்திட்டங்கள் நீக்கப்பட்டு குறைவான அளவோடு வர்த்தக கோட்பாடு பாடத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. மேலும், இப்புதிய முறை அமல்படுத்தப் பட்டால் ஐடிஐயில் பயிற்சி பெற்று நிறு வனங்களுக்கு செல்லும் தொழிலாளர்கள் கணிதம், தொழில்நுட்ப வரைபடம், இயந்திர அறிவியல் போன்ற எந்த நிபுணத்துவமும் இல்லாமல் வெறும் சொல்வதைச்செய்யும் கூலித் தொழிலாளியாக மட்டுமே பணிபுரிவார்கள்.
இது முற்றிலும் துறையை, பயிற்சியின் தரத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையாகும். எனவே, புதிய தொழிற்கல்வி முறையை தடுத்து நிறுத்தவதோடு, தொழிற்பயிற்சித் துறையின் நோக்கத்தை முழுமையாக அமல்படுத்தி, தமிழ்நாடு தொழிற் துறையில் மேலும் வளர்ந்திடவும் வாய்ப்பு உருவாக்கிடவும், இத்துறையின் பயிற்சி மேம்படவும் தமிழ்நாடு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உக்ரைனில் படித்த மருத்துவ மாணவர்கள் வழக்கு: ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
பயிற்சியாளர்களுக்கு இயந்திரங்களில் உரிய பயிற்சி அளிக்கப்பட்டுவரும் இத்துறையில் திறன் பெற்ற உதவியாளர் முதல் முதல்வர் வரை உள்ள சுமார் 40 விழுக்காடு காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும். பயிற்சியாளர்களுக்கான உதவித்தொகையை அதிகப்படுத்திடவும், தொழில்நிறுவனங்கள் தொழில்பழகுநர் பயிற்சியில் பணிபுரியும் பயிற்சியாளர்களை பணி நிரந்தரம் செய்திடவும் தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
Natchathiram Nagargiradhu and Neelam forum speaks politics against communists |Writer Bharadhinathan
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.