Aran Sei

பிரதமர் நரேந்திர மோடியின் புதிய அதிகாரப்பூர்வ இல்லம் கட்டுவதற்கான டெண்டரில் பங்கேற்பதற்கான ஏலம் – ஒன்றிய அரசு அழைப்பு

பிரதமருக்கான புதிய அதிகாரப்பூர்வ இல்லம் கட்டுவதற்கு, ஒன்றிய அரசின் பொதுப்பணித் துறை கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி, டெண்டரில் பங்கேற்பதற்கான ஏலத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

பெரிய சென்ட்ரல் விஸ்டா மறுவடிவமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, மத்திய பொதுப்பணித் துறை, கட்டுமான நிறுவனங்களிடமிருந்து டெண்டர் செயல்முறையில் பங்கேற்க ஏலங்களைக் கோரியுள்ளது.

மத்திய பொதுப்பணித் துறை திட்டமானது (ஐந்தாண்டுகளுக்கான கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) ₹360 கோடி செலவாகும் என்றும், முடிக்க 21 மாதங்கள் ஆகும் என்றும் மதிப்பிட்டுள்ளது. டெண்டரில் பங்கேற்பதற்காக ஏலத்திற்கான செயல்முறை அக்டோபர் 14 வரை திறந்திருக்கும், அதன் பிறகு தகுதிபெறும் ஏலதாரர்கள் தங்கள் டெண்டரை சமர்ப்பிக்கும்படி கேட்கப்படுவார்கள்.

‘புதிய நாடாளுமன்ற கட்டப் பணிகளுக்கு கூடுதலாக ரூ.200 கோடி செலவாகலாம்’- ஒன்றிய பொதுப்பணித் துறை தகவல்

பிரதமரின் இல்ல வளாகம், “ராஷ்டிரபதி பவன் மற்றும் சவுத் பிளாக்கிற்கு அருகிலும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன கட்டிடத்திற்கு எதிரே, தாரா ஷிகோ ரோடு, புது டெல்லியில்” அமையவுள்ளது என்று மத்திய பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது.

இந்த வளாகத்தில் பிரதமரின் இல்லம், பிரதமரின் உள்துறை அலுவலகம், சிறப்புப் பாதுகாப்புக் குழு அலுவலகம், விருந்தினர் மாளிகை மற்றும் அடித்தளத்தில் வாகன நிறுத்துமிடம் ஆகியவை சுமார் 21,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமையவுள்ளது.

முதலில் ஜூலை 18 அன்று ரூ.360 கோடி திட்டத்திற்கான முன் தகுதிக்கான டெண்டரை வெளியிட்டது, ஆனால் சில “நிர்வாக காரணங்களை” காரணம் காட்டி ஜூலை 22 அன்று அது திரும்பப் பெறப்பட்டது.

‘புதிய நாடாளுமன்றம் கட்டும் பணத்தில் தடுப்பு மருந்துகளை வாங்கியிருக்க வேண்டுமல்லவா’ – பிரதமருக்கு காங்கிரஸ் கேள்வி

மத்திய விஸ்டா பகுதியை மறுசீரமைப்பதற்கான அரசாங்கத்தின் திட்டத்தில் ஒரு புதிய பாராளுமன்றத்தின் கட்டுமானம் அடங்கும், இது நவம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் அனைத்து அமைச்சகங்களுக்கும் பொதுவான மத்திய செயலகம், பிரதமரின் அலுவலகம் ஆகியவையே கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Source : the hindu

Vetrimaran Latest Viral Speech about BJP in Thol Thirumavalavan மணிவிழா | Dravidan Politics | VCK

பிரதமர் நரேந்திர மோடியின் புதிய அதிகாரப்பூர்வ இல்லம் கட்டுவதற்கான டெண்டரில் பங்கேற்பதற்கான ஏலம் – ஒன்றிய அரசு அழைப்பு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்