Aran Sei

விவசாயிகளின் முதுகெலும்பையும் ஒன்றிய அரசு உடைத்து விட்டது – ராகுல்காந்தி

மோடி அரசின் கொள்கைகளால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து விட்டது. வேலைவாய்ப்பு இல்லை. மக்கள் திண்டாடுகிறார்கள். விவசாயிகளின் முதுகெலும்பையும் ஒன்றிய அரசு உடைத்து விட்டது என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தைக் கடந்த செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். இந்த நடைப்பயணம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா வழியாக கடந்த 7-ந் தேதி மகாராஷ்டிராவை வந்தடைந்தது.

தொடர்ந்து திட்டமிட்டே சாவர்க்கரை அவமதித்து வரும் ராகுல்காந்தி மீது புகார் அளிக்க போகிறேன் – சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர்

ராகுல்காந்தியின் நாடு தழுவிய நடைப்பயணம் நேற்று 70-வது நாளை எட்டியது. மகாராஷ்டிராவில் அவர் 10-வது நாளாக நடைப்பயணம் மேற்கொண்டார். வாசிம் மாவட்டம் ஜாம்ருன் பாட்டா என்ற இடத்திலிருந்து காலை 6 மணிக்கு நடைப்பயணம் தொடங்கியது. அவருடன் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் நடைப்பயணம் மேற்கொண்டனர். இரவில் அகோலா மாவட்டத்தை சென்றடைந்தனர்.

அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, “காங்கிரஸ் தலைமையிலான அரசு கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டம், உணவு பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்து சாதாரண குடிமக்களுக்கு அதிகாரம் அளித்து அவர்களின் நிலைமையை மேம்படுத்தியது.ஆனால் தற்போது மோடி அரசின் கொள்கைகளால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து விட்டது. வேலைவாய்ப்பு இல்லை. மக்கள் திண்டாடுகிறார்கள். விவசாயிகளின் முதுகெலும்பையும் ஒன்றிய அரசு உடைத்து விட்டது என்று தெரிவித்துள்ளார்.

நாளை (வெள்ளிக்கிழமை) புல்தானாவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் ராகுல்காந்தி பேசவுள்ளார். மகாராஷ்டிராவில் 20-ம் தேதியுடன் நடைப்பயணம் நிறைவு பெறுகிறது. பின்னர் மத்திய பிரதேச மாநிலத்தில் அவர் நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

Source : the print

நெத்தியில நாமம் போட்டா நல்லவரா? | பிரதீப்பை கோமாளியாக்கிய நெட்டிசன்கள் | Aransei Roast | Love Today

விவசாயிகளின் முதுகெலும்பையும் ஒன்றிய அரசு உடைத்து விட்டது – ராகுல்காந்தி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்