Aran Sei

நரிக்குறவர், குருவிக்காரர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் – தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை

ரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமூகத்தினரைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடந்த மார்ச் கடிதம் எழுதியிருந்த நிலையில், நரிக்குறவர், குருவிக்காரர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நரிக்குறவர், குருவிக்காரர், பலவேசம் கட்டுபவர் இன்னும் பிற அறியப்படாத, அறியப்படுத்தப்படாத எத்தனையோ பழங்குடி இனத்தவர்கள் இன்னும்கூடத் தங்களுக்கான அடையாளமாக சாதிச் சான்றிதழ் பெறப் போராடிவருவதைப் பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் நாம் கண்டுவருகிறோம். இதன் காரணமாகப் பழங்குடி இனத்தைச் சேர்ந்த எத்தனையோ முதல் தலைமுறை மாணவர்கள் பள்ளிப்படிப்பை முடித்தும், மேற்படிப்பைத் தொடர முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இது மட்டுமல்லாமல், இட ஒதுக்கீட்டின் மூலம் தனக்குக் கிடைக்கவேண்டிய உரிமையைக்கூட இவர்கள் இழக்க நேரிடுகிறது.

கடந்த மூன்று நிதியாண்டில் திருப்பி ஒப்படைக்கப்பட்ட ரூ.265 கோடி பழங்குடியினர் நலத்துறை நிதி – ஆர்.டி.ஐ., தகவல்

இப்படியான சூழ்நிலையை தினமும் பல பழங்குடியினர்கள் எதிர்கொண்டுவரும் நிலையை கருத்தில் கொண்டுதான் நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமூகத்தினரைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். இந்த இரு சமூகத்தினரையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதன் மூலம், இவர்களும் அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்குரியவர்களாக தகுதி பெறுவர். மேலும், இந்த இரு சமூகத்தினரையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு இந்தியத் தலைமைப் பதிவாளரும் ஒப்புதல் வழங்கியுள்ளார்” என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.

தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று நரிக்குறவர், குருவிக்காரர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக ஒன்றிய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா தெரிவித்துள்ளார்.

” I am not to answer to lies”, Srimathi’s Mother says | Kallakurichi Sakthi School Issue New update

நரிக்குறவர், குருவிக்காரர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் – தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்