Aran Sei

அஸ்ஸாம் துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி: டிமாசா தேசிய விடுதலை அமைப்பு காரணமா?

பாஜக ஆளக்கூடிய அஸ்ஸாம் மாநிலம் கார்பி அங்லாங் மாவட்டம் கார்னைதிசா என்னும் கிராமத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒரு பெண் உட்பட இரண்டு பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த புதன்கிழமையன்று இரவு அக்கிரமாத்தில் மக்கள் அனைவரும் ஒன்றுக்கூடி புஷூ திமா என்ற பண்டிகையைக் கொண்டாடி கொண்டிருக்கும் வேளையில் அந்தப் பயங்கர சம்பவம் நடைபெற்றதாகக் கார்பி மாவட்டத்தின் காவல்துறை காண்காணிப்பாளர் டெபாஜித் தியோரி தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் இரண்டு மசூதிகளை தாக்க திட்டமிட்டிருந்த இந்தியர் – உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தில் கைது

அமித் நுனிசா (42) மற்றும் அலோட்டா மைபோங்சா (60)  ஆகியோர் சம்பவம் இடத்திலியே உயிரிழந்ததாகத் தெரியவந்துள்ளது. மேலும் அசித் போங்லோசா (25) என்பவர் படுகாயம் அடைந்து  மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையைக் கடந்து நலமுடன் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

துப்பாக்கி சூட்டின் பின்னணியில் டிமாசா தேசிய விடுதலை அமைப்பு இருக்கலாமெனக் காவல்துறையினர் கருதுகின்றனர்.

இந்த மரணங்களுக்கு முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், குற்றவாளிகள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக  இந்தியன் எக்ஸ்பிரஸ்  செய்தி வெளியிட்டுள்ளது.

உயிரிழந்த அமித்  நுனிசா தடைசெய்யப்பட்ட டிமா ஹலீம் தாவோகாவின் (டி.எச்.டி) முன்னாள் உறுப்பினர் என்று உள்ளூர் வட்டரங்கள் குறிப்பிடுவதாகவும், அதை மாவட்ட காவல்துறை காண்காணிப்பாளர் டெபாஜித் தியோரி மறுத்துள்ளதாகவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது

 

அஸ்ஸாம் துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி: டிமாசா தேசிய விடுதலை அமைப்பு காரணமா?

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்