Aran Sei

வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கதை கையாள்வதில் 100% தோல்வி அடைந்த ஒன்றிய அரசு – சரத் பவார் விமர்சனம்

Image Credits: DNA India

ணவீக்கம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்சினைகளை கையாள்வதில் ஒன்றிய அரசு “100 விழுக்காடு தோல்வியடைந்துள்ளது” என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் அயோத்தி மற்றும் பிரார்த்தனை போன்றவைக்கு ஒன்றிய அரசு முன்னுரிமை அளிக்கிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

கோலாப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய பவார், “அயோத்தி செல்வது தேசிய பிரச்சினை அல்ல. ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை இயக்குனரகம் (ED) சோதனை நடத்துகிறது. ஆனால் அது எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் மேல் மட்டுமே நடவடிக்கை எடுக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

டேனிஷ் சித்திக்: இந்தியாவின் கொரோனா 2-வது அலையின் கோர முகங்களை படம் பிடித்ததற்காக 2-வது புலிட்சர் விருதை வென்றார்.

2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடி அரசு ஆட்சிக்கு வந்தபோது பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்சனைகளைத் தீர்ப்பதாக மக்களுக்கு உத்தரவாதம் அளித்தது. ஆனால், அவர்கள் “100 விழுக்காடு தோல்வியடைந்துள்ளனர்”, சரியான நேரத்தில் மக்கள் அவர்களிடமிருந்து எல்லாவற்றையும் மீட்டெடுப்பார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

சாமானியர்கள் இந்த பிரச்சினைகளை எதிர்கொண்டாலும், ஒன்றியத்தில் ஆட்சியில் இருப்பவர்கள் இந்த பிரச்சினைகளில் கவனம் செலுத்த தயாராக இல்லை. மேலும், இந்த பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப மதம் தொடர்பான விஷயங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன,” என்று சரத் பவார் கூறியுள்ளார்.

தருமபுர ஆதீன பட்டணப் பிரவேசத்திற்கு அனுமதி: திமுக அரசின் முற்போக்கு திட்டங்களை மிரட்டிப் பணிய வைக்கும் காவித் திட்டம் என கி.வீரமணி விமர்சனம்

“நாம் இப்போது ஒரு சுதந்திர நாடாக இருக்கிறோம். எந்தவொரு பிரச்சினைக்கும் எதிராக குரல் எழுப்ப ஒவ்வொரு நபருக்கும் உரிமை உள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் அமலாக்கத்துறை சோதனைகள் குறைந்துள்ளதா என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, சோதனைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதா என்பது தனக்குத் தெரியாது என்று சரத் பவார் கூறியுள்ளார்.

இஸ்லாமியர்களின் கருவுறுதல் விகிதம் கடும் சரிவு: தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் தகவல்

ஆனால், ஒன்றிய அரசில் அங்கம் வகிக்கும் நபர்கள் மீது அமலாக்கத்துறை சோதனை நடத்தியதாக நான் எங்கும் படிக்கவில்லை. மாறாக, எதிர்க்கட்சிகள் மீது நடவடிக்கை தொடர்கிறது,” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

பா.ஜ.க.வுக்கு எதிராக மாற்று முன்னணியை உருவாக்குவது குறித்த கேள்விக்கு, இந்த விவகாரம் குறித்து விவாதம் நடந்து வருவதாக பவார் கூறியுள்ளார்.

Source: newindianexpress 

Surya Siva திமுகவுக்கு உழைச்ச லட்சணத்த நா சொல்றேன்

வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கதை கையாள்வதில் 100% தோல்வி அடைந்த ஒன்றிய அரசு – சரத் பவார் விமர்சனம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்