தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் கீழ், வார் ரூமில் அருவெறுக்கத்தக்க தனிப்பட்ட தாக்குதலுக்கு உள்ளாகிறோம் என்று காயத்ரி ரகுராம் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் மாநிலத் தலைவர் காயத்ரி ரகுராமை கட்சியிலிருந்து ஆறு மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்து அண்ணாமலை நடவடிக்கை எடுத்தார். இந்த நடவடிக்கைக்குப் பிறகு காயத்ரி ரகுராம் தொடர்ந்து அண்ணாமலை மீது விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்.
இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையின் கீழ் இயங்கும் வார் ரூமில் இருந்து தரக்குறைவான தனிப்பட்ட தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவதாகவும், இதுகுறித்து காவல் துறை விசாரணை செய்ய வேண்டும் என்றும் பாஜகவிலிருந்து நீக்கப்பட்டுள்ள காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் கீழ், வார் ரூமில் அருவெறுக்கத்தக்க தனிப்பட்ட தாக்குதலுக்கு உள்ளாகிறோம். எனவே, தமிழக காவல் துறை இதுதொடர்பாக விசாரணை செய்ய வேண்டும். பெண்கள் குறித்து தரக்குறைவான கருத்துகளைத் தெரிவிக்கின்றனர்” என்று பதிவிட்டுள்ளார்.
ஆப்பாயில் டாக்டர் சர்மிகா | சங்கியிடம் ஏமாறும் மக்கள் | Aransei Roast | Dr Sharmika | BJP | DAISY
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.