தற்போதைய ஆட்சியின் கீழ் நாடு உள்நாட்டுப் போரை நோக்கிச் செல்கிறது என்று ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
சம்பூர்ண கிராந்தியின் (ஒட்டுமொத்த புரட்சி) ஆண்டு நிறைவைக் குறிக்கும் மகா கூட்டணியின் நிதியுதவி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாததால் காணொளி செய்தியை வெளியிட்டுள்ளார். அதில் சர்வாதிகாரத்திற்கு எதிராக , புரட்சித் தலைவர் ஜெய் பிரகாஷ் நாராயண் மொத்த புரட்சி தொடங்கியாதாக குறிப்பிட்டுள்ளார்.
சமூகத்தின் விளிம்புநிலையில் உள்ள மக்களை சமூகத்தின் மைய நீரோட்டத்துடன் ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் அவரின் (ஜெய் பிரகாஷ் நாராயண்) போராட்டம் இருந்தது என்று லாலு தெரிவித்துள்ளார்.
இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் ஆதரவுடன் சர்வாதிகாரத்திற்கு எதிராக ஜெய் பிரகாஷ் நாராயண் போராடினார் என்று லாலு கூறியுள்ளார். நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை பிளவுபடுத்த சில சக்திகள் முயற்சிக்கின்றன. பழைய நிலைமை திரும்புவதை பார்க்க முடிகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
நாடு ஓர் உள்நாட்டுப் போரை நோக்கிச் செல்கிறது, இளைஞர்களும் மாணவர்களும் நாட்டைப் பிளவு படுத்தும் சக்திகளுக்கு எதிராக போராடுவதற்கு இணைய வேண்டும். இடதுசாரி கட்சிகள் தொடர்ந்து போராட வேண்டும் என்றும் லாலு பிரசாத் யாதவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஒன்றிய அரசின் முன்னாள் அமைச்சரும் பாட்னா சாஹிப் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிசங்கர் பிரசாத், “லாலுவின் ஒட்டுமொத்த குடும்பமும் ஊழலில் ஆழ்ந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
Source: Newnewindianexpress
உச்சகட்டத்தில் அதிமுக பாஜக மோதல்! கூட்டணி உடைகிறதா? Manoj Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.