இந்தியாவில் சிறுபான்மையினரை குறிவைத்து நடத்தப்படும் வீடுகள் இடிப்பு போன்ற கூட்டுத் தண்டனை நடவடிக்கைகளுக்குக் கண்டனம் தெரிவித்து ஐக்கிய நாடுகள் சிறப்பு பிரதிநிதிகள் இந்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
மூன்று சிறப்பு பிரதிநிதிகள் கூட்டாக எழுதியிருக்கும் கடிதத்தில், “கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற்ற மத ஊர்வலங்களின்போது, இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களிடையே நடைபெற்ற மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மத்தியபிரதேச மாநில கார்கோன், குஜராத் மாநிலம் ஆனந்த் மற்றும் டெல்லியின் ஜஹாங்கிர்புரி ஆகிய இடங்களில் இஸ்லாமியர்களின் வீடுகள் இடிக்கப்பட்டதை அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஜூன் 9 ஆம் தேதியிட்ட அந்த கடித்தத்தில், உத்திரபிரதேச அரசால் கடந்த வாரம் சஹரன்பூர், அலகாபாத் மற்றும் பிற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட இடிப்பு நடவடிக்கைகுறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.
பிரயாக்ராஜ் வன்முறை: ‘ஒரு குடும்பத்தை உடைத்துவிட்டார்கள்’ – ஜாவேத் முகமதுவின் மகள் சுமையா நேர்காணல்
இருப்பினும் கடிதத்தில் கையெழுத்திட்டவர்களில் ஒருவரான வீட்டு வசதிக்கான சிறப்பு பிரதிநிதி பாலகிருஷ்ணன் ராஜகோபால், ”சமீபத்திய நடவடிக்கைகள் அதே குழப்பமான முறையின் ஒரு பகுதியாகத் தெரிகிறது” என்று தெரிவித்துள்ளார்.
சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக ஒரு கூட்டுத் தண்டனையை இந்திய அரசு வழங்கியுள்ளது என்று அந்த கடிதத்தில் கூறப்படப்பட்டுள்ளது.
மேலும், இது பழிவாங்கும் நடவடிக்கை என்பதற்கு ஆதாரமாக மத்தியப்பிரதேச உள்துறை அமைச்சர் மற்றும் மூத்த மாநில அமைச்சர்களின் மேற்கோள்கள் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முறையான விசாரணை இல்லாமல், குற்றத்தை ஆதாரத்துடன் நிறுவாமல் இடிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அந்த கடிதத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளன.
இந்திய அரசு எந்த அடிப்படையில் செயல்பட்டது. நடத்தப்பட்ட விசாரணைகள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகத்துடன் ஏதேனும் முன்கூட்டியே ஆலோசனைகள் நடத்தப்பட்டதா என்பது குறித்து தங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சிறப்பு பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.
மேலும், இந்திய அரசு பதிலளிக்க 60 நாட்கள் கால அவகாசத்தையும் அவர்கள் வழங்கியுள்ளனர்.
Source: The Wire
அதானிக்காக மக்களை கைவிட்ட பாஜக | Modi | BJP | Adani | Corona | Sri lanka | WTO | Rajapaksa | Vaccine
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.