Aran Sei

‘விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வர பிரிட்டிஷ் சட்டம் எளிதாக இல்லை’ – இங்கிலாந்து பிரதமர்

விஜய் மல்லையாவையும் நீரவ் மோடியையும் இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான கேள்விக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பில் பதிலளித்துள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், விசாரணைக்காக அவர்களை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்ப இங்கிலாந்து அரசு விரும்புவதாகவும், பிரிட்டிஷ் சட்ட முறையைப் பயன்படுத்தி, இந்திய சட்டத்தில் இருந்து தப்பிக்க விரும்புபவர்களை நாங்கள் வரவேற்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

“நீங்கள் குறிப்பிட்டுள்ள இரண்டு நபர்கள் மீது, நாடு கடத்தப்பட கோரும் வழக்கு உள்ளது. ஆனால், சட்ட தொழில்நுட்பங்கள் அதை கடினமாக்குகிறது. அவர்களை நாடு கடத்த இங்கிலாந்து அரசு உத்தரவிட்டுள்ளது என்பதை நான் உங்களிடம் சொல்லிக்கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

மல்லையாவை இந்தியாவுக்குக் கொண்டு வருவதில் ரகசிய நடவடிக்கைகள் – உச்ச நீதிமன்றம் கேள்வி

“அவர்கள் விசாரணைக்காக இந்தியாவிற்கு கொண்டு வரப்பட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். திறமையும் புத்திசாலித்தனமும் உள்ளவர்களை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், பிரிட்டிஷ் சட்ட அமைப்பைப் பயன்படுத்தி, இந்திய சட்டத்தில் இருந்து தப்பிக்க விரும்பி இங்கிலாந்திற்கு வருபவர்களை நாங்கள் வரவேற்கவில்லை” என்று போரிஸ் ஜான்சன் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் தங்கள் நிறுவனங்கள் வழியாக பொதுத்துறை வங்கிகளில் மோசடி செய்ததன் மூலம், 2022ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி வரை பொதுத்துறை வங்கிகளுக்கு மொத்தம் ரூ. 22,585.83 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தது.

Source: NDTV

இந்தியாவில் செயற்கை மின்வெட்டு ஏற்படுத்தப்படுகிறதா? உண்மை என்ன?

 

‘விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வர பிரிட்டிஷ் சட்டம் எளிதாக இல்லை’ – இங்கிலாந்து பிரதமர்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்