Aran Sei

கோவிட்ஷீல்ட் தடுப்பூசியை அங்கீகரிக்காத இங்கிலாந்து அரசின் முடிவு – பாரபட்சமானது என ஒன்றிய அரசு குற்றச்சாட்டு

கோவிட்ஷீல்ட் செலுத்திக் கொண்டவர்களை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களாக கருத முடியாது என்ற இங்கிலாந்து அரசின் முடிவு பாரபட்சமானது என இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்துள்ளார்.

”கோவிட்ஷீல்டை செலுத்திக் கொண்டவர்களைத் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களாக அங்கீகரிக்க முடியாது என்று கூறியிருக்கும் இங்கிலாந்து அரசின் முடிவு பாரபட்சமானது. இதனால் இங்கிலாந்து செல்லும் இந்தியர்கள் பாதிக்கப்படுவார்கள். இது தொடர்பாக இங்கிலாந்தின் வெளியுறவுச் செயலாளருடன் இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இங்கிலாந்து தரப்பில் இருந்து சில உத்திரவாதங்கள் அளிக்கப்பட்டுள்ளன, பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பீமாகோரேகான் வழக்கு – ஆனந்த் டெல்டும்டே, கவுதம் நவுலாகா பிணை மனுவை நிராகரித்த நீதிமன்றம்

இந்தியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் சில நாடுகளைச் சேர்ந்த தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை, தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களாக கருதி, அவர்களை 10 நாட்கள் தனிமைப்படுத்த இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது.

புதிய விதிகளின்படி, இந்தியாவில் இருந்து இங்கிலாந்து செல்பவர்கள் 10 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுவார்கள், இந்தக் காலத்தில் அவர்களுக்குக் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

தலித் குழந்தை கோவிலுக்குள் நுழைந்ததால் ‘தீட்டு’ – கோவிலைச் சுத்தம் செய்ய 23,000 அபராதம் விதித்த ஆதிக்கச் சாதியினர்

இங்கிலாந்து அரசின் இந்த முடிவிற்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் சசி தரூர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இங்கிலாந்து செய்தி ஆய்வாளர் அலெக்ஸ் மச்ரேசின் ட்விட்டர் பதிவைப் பகிர்ந்துள்ள திருவனந்தபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர்,”புதிய விதியினால் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடைபெற இருக்கும் விவாதம் மற்றும் எனது புத்தகத்தின் இங்கிலாந்து பதிப்பின் வெளியீட்டு விழாவில் பங்கேற்பதில் சிக்கல் உருவாகியுள்ளது. முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்தியர்களைத் தனிப்படுத்துவது அவர்களைப் புண்படுத்தும் செயல். இங்கிலாந்து இதை மறுபரிசீலனை செய்கிறது” என பதிவிட்டுள்ளார்.

அரண்செய் சிறப்பிதழ் – ஆப்கானிஸ்தான்

மாநிலங்களவை உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ், “இது முற்றிலும் தவறானது, கோவிட்ஷீல்ட் உண்மையில் இங்கிலாந்தில் கண்டுபிடிக்கபட்டது. அதை தயாரித்த சீரம் நிறுவனம், அதை இங்கிலாந்திற்கும் விநியோக செய்துள்ளது. இது இனவெறிய தூண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

Source : ANI

கோவிட்ஷீல்ட் தடுப்பூசியை அங்கீகரிக்காத இங்கிலாந்து அரசின் முடிவு – பாரபட்சமானது என ஒன்றிய அரசு குற்றச்சாட்டு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்