“மதத்தின் பெயரால் வன்முறையை அனுமதிக்க முடியாது” என்று ராஜஸ்தானின் உதய்பூர் படுகொலை குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இஸ்லாமியர்களின் இறைத்தூதர் நபிகள் நாயகத்தை விமர்சித்த நுபுர் சர்மா பாஜகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். நுபுர் சர்மாவின் கருத்துக்கு ஆதரவளித்த உதய்பூரைச் சேர்ந்த கன்னைய்யா லால் டெலி என்பவர் நேற்று (ஜூன் 29) மாலை படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கன்னைய்யா லால் டெலி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல்கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை இவரது கடைக்குள் நுழைந்த இரண்டு இஸ்லாமிய இளைஞர்கள் கன்னைய்யாவின் கழுத்தை வெட்டி படுகொலை செய்தனர். அந்த நேரத்தில், கொலைக்கான காரணத்தை விளக்கி கொலையாளிகளான முகம்மது ரியாஸ் அன்சாரியும், முகம்மது கவுஸும் காணொளி வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ள இந்த சம்பவத்தை அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வன்மையாகக் கண்டித்துள்ளார்.
“உதய்பூரின் கொடூரச் சம்பத்தால் நான் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளேன். மதத்தின் பெயரால் வன்முறையை ஏற்க முடியாது. இதுபோன்ற கொடூரங்களில் ஈடுபடுவோர் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். அனைவரும் ஒன்றாக இணைந்து வெறுப்புணர்வை தோல்வியுறச் செய்ய வேண்டும். நான் கேட்டுக் கொள்வது என்னவென்றால் அனைவரும் அமைதியையும், சகோதரத்துவத்தையும் காக்க வேண்டும்” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
“இந்த கொடூரமான கொலை சம்பவம் எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. ஒரு சிவில் சமூகத்தில் காட்டுமிராண்டித்தனத்திற்கு இடமில்லை” என்று ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ராகவ் சாதா தெரிவித்துள்ளார்.
“வெறுப்பு மற்றும் வன்முறையின் சூழல் சமூக ஒழுங்கை மனிதாபிமானமற்றதாக்குகிறது. இது முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். குற்றவாளிகள் கடுமையான தண்டனையைப் பெற வேண்டும்” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைவர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
Source : hindustantimes
கதறும் தினமலர் | உளறும் அண்ணாமலை, சீமான் | Manushyaputhiran Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.