ஊபர் (Uber) ஓட்டுநர்களுக்கு, குறைந்தபட்ச ஊதியம் உள்ளிட்ட தொழிலாளர் நல உரிமைகள் உண்டு என, பிரிட்டனின் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரண்டு முன்னாள் ஊபர் ஓட்டுனர்கள் தொடர்ந்த வழக்கில், 2016 ஆம் ஆண்டு லண்டன் வேலைவாய்ப்பு தீர்ப்பாயம், அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை, ஓய்வு நேரம் ஆகியவற்றிற்கான உரிமை உண்டு என தீர்ப்பளித்திருந்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஊபர் நிறுவனம் வழக்கு தாக்கல் செய்தது.
இதற்கிடையில், ஊபர் ஓட்டுநர்கள் தற்போது சுய தொழில் புரிவோராகக் கருதப்படுவதால், அவர்களுக்குச் சட்டப்படி குறைந்தபட்ச பாதுகாப்புதான் வழங்க முடியும் என, ஊபர் நிறுவனம் நீண்ட காலமாகக் கூறிவந்தது.
இந்நிலையில், ”ஊபர் நிறுவனத்தின் முறையீட்டை உச்சநீதிமன்றம் ஒருமனதாகத் தள்ளுபடி செய்கிறது” என நீதிபதி ஜார்ஜ் லெகட், வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 19) தெரிவித்தார்.
ஆனால், இந்த வழக்கின் ஒரு பகுதியாக இருக்கும் 25 ஓட்டுநர்களுக்கு மட்டுமே இந்தத் தீர்ப்பு பொருந்தும் என்றும், உலக சந்தைகளில் ஒன்றான லண்டன் நகரில் இருக்கும் 45 ஆயிரம் ஓட்டுநர்கள் உள்ளிட்ட, பிரிட்டனின் 60 ஆயிரம் ஓட்டுநர்களுக்கு இந்த தீர்ப்பு பொருந்தாது என ஊபர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனாவிற்கு எதிராக பதாஞ்சலியின் கொரோனில் மருந்து – அங்கீகாரம் வழங்கிய ஆயுஷ் அமைச்சகம்
”2016 ஆம் ஆண்டு ஊபர் செயலியைப் பயன்படுத்திய, ஒரு சிறிய எண்ணிக்கையிலான ஓட்டுநர்களை மையமாகக் கொண்டு வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம். நாங்கள் நிறைய செய்ய இருக்கிறோம், அதற்காகப் பிரிட்டனில் இருக்கும் ஊபர் பயன்படுத்தும் ஒவ்வொரு ஓட்டுநரும் என்ன மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பது குறித்து கலந்தாலோசிப்போம்” என வடக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவிற்கான ஊபர் தலைவர் ஜேமி ஹேவுட் கூறியுள்ளார்.
நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை அடுத்து லண்டன் பங்குசந்தையின் முன்பகுதி வர்த்தகத்தில் ஊபரின் பங்குகள் 3.4 % சரிந்தன.
Source: Reuters
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.