பீமா கோரிகான் வழக்கில் கைது செய்து மும்பை தலோஜா சிறையிலடைக்கப்பட்டு, பின்னர் ஜூலை 5 ஆம் தேதி மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த பழங்குடியின மக்கள் உரிமை போராளி ஸ்டான் சுவாமியின் அஸ்தி மற்றும் உருவப்படத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
லயோலா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில், மக்களை உறுப்பினர்கள் கனிமொழி, தயாநிதி மாறன், மாநில சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச்செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான சிந்தனை செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நீக்கப்பட்ட சட்டமும் நீக்கப்படாத வழக்கும்: உச்சநீதிமன்ற உத்தரவு சரியாக பின்பற்றுகிறதா?
தலைமை செயலகத்தில் இருந்து வெளியிடப்பட்டிருந்த அறிக்கையில், ”இந்திய பழங்குடியின மக்களின் உரிமைகள் மற்றும் வளர்ச்சிக்காக போராடிவந்த அருட்தந்தை ஸ்டான் சுவாமி, இந்திய அரசியலமைப்பின் ஐந்தாவது அட்டவணை முழுமையாக இதுவரை நடைமுறைப்படுத்தாதது குறித்து கேள்வி எழுப்பினார்.
ஜார்கண்டில் உள்ள பழங்குடியின மக்களின் நிலங்களைக் காக்க போராடிய ஸ்டான் சுவாமி, பழங்குடியின பாதுகாப்பு, நலன் மற்றும் வளர்ச்சியை உறுதிப்படுத்த பழங்குடியின ஆலோனை குழுவை அமைக்குமாறு கேட்டுக் கொண்டார்.” என குறிப்பிடப்பட்டிருந்தது.
கன்வார் யாத்திரையை ரத்து – உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பணிந்த உ.பி. அரசு
முன்னதாக ஸ்டான் சுவாமி மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டியிருந்த இரங்கல் செய்தியில், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடி வந்த ஸ்டான் சுவாமிக்கு நேர்ந்தது போல யாருக்கும் நேரக் கூடாது” என தெரிவித்திருந்தார்.
Source : The Hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.