Aran Sei

முகமது நபிகள் தொடர்பாக பாஜக பிரமுகர்கள் தெரிவித்த கருத்து – கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா

Credit: AFP

முகமது நபி தொடர்பாக பாஜக பிரமுகர்கள் கருத்து தெரிவித்ததற்கு அரபு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், அமெரிக்காவும் தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ், ”பாஜக பிரமுகர்களின் அவதூறான கருத்துக்களை நாங்கள் கண்டிக்கிறோம். மேலும், அந்தக் கருத்துக்களைக் கட்சி பகிரங்கமாக கண்டிக்கிறது என்பதை அறிந்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

”மத சுதந்திரம் மற்றும் நம்பிக்கை உள்ளிட்ட மனித உரிமை பிரச்னைகளில் தொடர்ந்து இந்திய அரசுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். மேலும், மனித உரிமைகளுக்கு உரிய மதிப்பு அளிக்க இந்தியாவை ஊக்குவிக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

நபிகள் விவகாரம்: அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும் என இந்தியாவை அறிவுறுத்திய சீனா

தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, முஹம்மது நபிகுறித்த அவதூறான வகையில் கருத்துக்களை தெரிவித்திருந்தார். இதற்கு இஸ்லாமியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

மேலும், இந்த கருத்து தொடர்பாக இந்தியாவுடன் நட்பாக இருக்கும் மத்திய கிழக்கு நாடுகளும் அவர்களது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தனர்.

நபிகள் நாயகத்தை அவமதித்த விவகாரம்: போராட்டம் நடத்திய வெளிநாட்டினரை கைது செய்து நாடு கடத்த குவைத் அரசு முடிவு

இந்நிலையில், நிலைமையைச் சமாளிக்கும் விதமாக நபி தொடர்பாக கருத்து தெரிவித்த நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டாலை கட்சியில் இருந்து பாஜக நீக்கியுள்ளது.

1990 களின் பிற்பகுதியில் இருந்து இந்தியாவுடனான உறவுகளை பலப்படுத்த அமெரிக்கா முயன்று வருகிறது. சீனாவை எதிர்கொள்வதில் இரண்டு நாடுகளும் பொது நலன்களைக் கொண்டுள்ளதாக அமெரிக்கா கருதுகிறது.

முஹம்மது நபி குறித்த அவதூறு கருத்து –  இந்திய அரசு பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கத்தார் அரசு வலியுறுத்தல்

எவ்வாறாயினும், நரேந்திர மோடியின் ஆட்சியில் இஸ்லாமியர்கள் இலக்கு வைக்கப்படுவது தொடர்பாக பலமுறை அமெரிக்கா அதன் கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

Source: The Hindu

எச்சரிக்கை I நெருங்கும் காவி இருள் I தாமதித்தால் ஆபத்து I Maruthaiyan Interview

முகமது நபிகள் தொடர்பாக பாஜக பிரமுகர்கள் தெரிவித்த கருத்து – கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்