உத்திரபிரதேசத்தில் நபிகள் நாயகம் பற்றிய கருத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் வீடுகள் இடிக்கப்பட்டது தொடர்பாக ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் குழு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.. ரமணாவுக்கு கடிதம் எழுதியுள்ளது.
உத்தர பிரதேசத்திலும் நாட்டின் பிற பகுதிகளிலும் நடைபெற்ற “மோசமான மீறல்கள்” குறித்து தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்குமாறு தலைமை நீதிபதியை ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
90 பேர் கையெழுத்திட்ட அரசியலமைப்பு நடத்தைக் குழுவின் (சிசிஜி) கடிதம் திங்களன்று தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட்டது. நீதித்துறை தலையிடாவிட்டால், நாட்டின் அரசியலமைப்பு நிர்வாகத்தின் முழு அமைப்பும் இடிந்து விழும் என்று அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி. சுதர்சன் ரெட்டி, வி. கோபால கவுடா, ஏ.கே. கங்குலி, டெல்லி உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி ஏ பி ஷா, முன்னாள் சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே சந்துரு, கர்நாடக உயர் நீதிமன்றம் ஓய்வுபெற்ற முகமது அன்வர், உச்ச நீதிமன்றம் மூத்த வழக்கறிஞர்கள் சாந்தி பூஷன், இந்திரா ஜெய்சிங், சந்தர் உதய் சிங், பிரசாந்த் பூஷன், ஆனந்த் குரோவர், சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர், ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இணைந்து கடிதம் எழுதியிருந்தனர்.
அந்தக் கடிதத்தில், முகமது நபியைப் பற்றி உத்தரப் பிரதேசத்தில் பாஜக செய்தித் தொடர்பாளர்கள் சமீபத்தில் தெரிவித்த கருத்துகள் போராட்டங்களை விளைவித்துள்ளதாகவும், போராட்டக்காரர்கள் அமைதியான போராட்டங்களில் ஈடுபட வாய்ப்பளிப்பதற்கு பதிலாக, அவர்களுக்கு எதிராக மாநில அரசே வன்முறை நடவடிக்கை எடுக்க அனுமதித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்க வேண்டுமென்ற எண்ணம் யாருக்கும் வரகூடாது என முதல்வர் அதிகாரபூர்வமாக அறிவுறுத்தியதாக கூறப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
உத்தர பிரதேசம்: புல்டோசர்களுடன் கொடி அணிவகுப்பு நடத்திய காவல்துறையினர்
மேலும், தேசிய பாதுகாப்பு சட்டம், சமூக விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் தண்டிக்கப்பட வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். அரசின் இந்த கருத்துகள்தான் போராட்டக்காரர்களை மிருகத்தனமாகவும் சட்டவிரோதமாகவும் சித்ரவதை செய்ய காவல்துறைக்கு தைரியத்தை அளித்துள்ளது என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
சிதம்பரம்: குழந்தை திருமணம் செய்து வைத்த நடராஜர் கோயில் தீட்சிதர்கள் – காவல்துறை வழக்கு பதிவு
இந்நிலையில், தற்போது எழுதியுள்ள கடிதத்தில் கையெழுத்திட்டவர்களில் ஏ.எஸ்.துலாத், வஜாஹத் ஹபிபுல்லா மற்றும் டி.கே.ஏ.நாயர் உள்ளிட்டோர் அடங்குவர். “தண்டனையின்மை உணர்வும், பெரும்பான்மை அதிகாரத்தின் ஆணவமும் அரசியல் சாசன விழுமியங்களை அலட்சியம் செய்வதாகத் தோன்றுகிறது” என்று தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
Source: thenewindianexpress
அடிமைகளின் சண்டையை தொண்டர்கள் முறியடிப்பார்கள் | ADMK latest News
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.