உளவு பார்த்ததாக அமெரிக்க அரசால் குற்றம்சாட்டப்பட்டுள்ள விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிற்கு நாடு கடத்த பிரிட்டன் அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. அரசின் முடிவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய இருப்பதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
அசாஞ்சேவை அமெரிக்காவிற்கு அனுப்பலாம் என்று கடந்த ஏப்ரல் மாதம் பிரிட்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்த நிலையில், அசாஞ்சேவை நாடு கடத்தும் உத்தரவில் பிரிட்டன் உள்துறை செயலாளர் ப்ரீத்தி பட்டேல் கையெழுத்திட்டுள்ளார்.
இது தொடர்பாக விக்கிலீக்ஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இன்று சண்டையின் முடிவு அல்ல. இது ஒரு புதிய சட்டப் போராட்டத்தின் தொடக்கம் மட்டுமே. நாங்கள் சட்ட அமைப்புமூலம் மேல்முறையீடு செய்வோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை: அதானிக்கு வழங்கப்பட்ட மின் திட்டம் – எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்
பிரிட்டனின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அசாஞ்சேவை நாடு கடத்துவது அடக்குமுறை, அநீதி அல்லது அதிகார துஷ்பிரயோகம் என பிரிட்டன் நீதிமன்றம் கூறியவில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நாடு கடத்துவது என்பது அசாஞ்சே மீதான நியாயமான விசாரணை மற்றும் கருத்து சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என நீதிமன்றம் கருதவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் அரசின் இந்த முடிவு, அமெரிக்காவில் விசாரணையை எதிர்கொள்வதைத் தவிர்ப்பதற்காக அசாஞ்சே மேற்கொண்ட பல ஆண்டு போராட்டத்தின் முக்கிய நிகழ்வாகும். இது இறுதி முடிவு அல்ல, மேல்முறையீடு செய்ய அவருக்கு 14 நாட்கள் அவகாசம் உள்ளது.
அசாஞ்சேவை நாடு கடத்துவதற்கு ஒப்புதல் அளித்து கடந்த ஏப்ரலில் தீர்ப்பளித்திருந்த நீதிபதி, இறுதி முடிவை அரசாங்கத்திடம் விட்டு விடுவதாக தெரிவித்திருந்தார்.
பிரிட்டன் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற நீண்ட நெடிய சட்டப்போராட்டத்திற்கு பிறகு இந்த தீர்ப்பு வந்தது.
மின் திட்டத்தை அதானிக்கு வழங்க அழுத்தம் கொடுத்த மோடி – இலங்கை மின்சார வாரியத் தலைவர் வாக்குமூலம்
அமெரிக்காவின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டது தொடர்பாக உளவு பார்த்தல், கணினியை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 17 குற்றச்சாட்டுகளை அசாஞ்சே மீது சுமத்திய அமெரிக்கா, அவரை நாடு கடத்துமாறு பிரிட்டன் அதிகாரிகளை கேட்டுக் கொண்டது.
ரகசிய ராஜதந்திர கோப்புகளை திருட ஜூலியன் அசாஞ்சேவிற்கு அமெரிக்க ராணுவ உளவுத்துறை ஆய்வாளர் செல்சியா மானிங் சட்டவிரோதமாக உதவியதாக அமெரிக்க வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த நாடு கடத்தல் கோரிக்கையை நிராகரிக்குமாறு பத்திரிகை அமைப்புகளும் மனித உரிமை குழுக்களும் பிரிட்டனுக்கு அழைப்பு விடுத்துள்ளன.
”ஜூலியன் அசாஞ்சே ஒரு பத்திரிகையாளராக செயல்பட்டு வருகிறார். ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானில் அமெரிக்கா செய்த தவறுகளை மட்டுமே அவர் வெளியிட்டுள்ளார். பேச்சு சுதந்திரின் உரிமைகளின்படி, அவர் பாதுகாப்பிற்கு உட்பட்டவர். அவர்மீதான குற்றச்சாட்டு அரசியல் உள்நோக்கம் கொண்டது” என்று அவரது வழக்கறிஞர்களும் ஆதரவாளர்களும் வாதிடுகின்றனர்.
முஹம்மது நபி குறித்த சர்ச்சை – அரபு நாடுகளில் பாஜகவுக்கு எதிர்ப்பு
அமெரிக்காவில் விசாரணையை எதிர்கொள்ளும் பட்சத்தில் அவருக்கு 175 ஆண்டுகள்வரை சிறைத் தண்டனை விதிக்கபடலாம் என்று அசாஞ்சேவின் வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் எந்தவொரு தண்டனையும் இதைவிட மிகக் குறைவானதாக இருக்கும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2019 ஆண்டு முதல் லண்டனில் உள்ள உயர் பாதுகாப்பு சிறையான பெல்மார்ஷ் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். ஒரு தனிப்போராட்டத்தின்போது பிணையை மறுத்ததற்காக அவர் கைது செய்யபட்டார்.
முன்னதாக, பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டுகளுக்காக ஸ்வீடன் நாட்டிற்கு நாடு கடத்தப்படுவதை தவிர்க்க லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்திற்குள் ஏழு ஆண்டுகள் அசாஞ்சே தங்கியிருந்தார்.
காலம் கடந்துவிட்டது எனக் கூறி இவர்மீதான பாலியல் குற்ற விசாரணையை நவம்பர் 2019 இல் ஸ்வீடன் அரசு கைவிட்டது.
Source: The Hindu
பாஜக அலுவலகத்தை அடித்து நொறுக்கிய இளைஞர்கள் Agnipath Scheme | Indian Army | Agniveer | Haseef | Deva
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.