Aran Sei

விவசாயிகளுக்கு ஆதரவாக இருசக்கர வாகன பேரணி – காவல்துறையின் தடைகளை உடைத்த விவசாய சங்கங்கள்

மூன்று விவசாய சட்டங்களை திரும்ப பெற கோரி டெல்லியில் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் நடைபெறுவதாக இருந்த இருசக்கர வாகனப் பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்ததால், விவசாயிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

இன்று (ஜனவரி 26) திருச்சியில் எம்ஜிஆர் சிலைக்கு அருகில் அனைத்து தொழிற்சங்கம் ஒருங்கிணைப்பு மற்றும் விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் இருசக்கர வாகனப் பேரணி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

தடுப்புகளை மீறி டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் : தொடங்கவுள்ள டிராக்டர் பேரணி

தொழிற்சங்கத்தினர், விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் என்று 500க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களில் வந்து குவிந்த நிலையில்,  இருசக்கர வாகன பேரணிக்கு காவல்துறை திடீர் அனுமதி மறுத்துள்ளனர். அதனால், அங்கு சிறிது பதற்றம் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து மாநகர காவல் துணை ஆணையர் பவன்குமார்  தலைமையில் 200க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பிற்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

காவல்துறை அனுமதி மறுத்தாலும் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, காவல்துறையினரின் தடுப்பையும் மீறி விவசாய சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து கண்டன முழக்கமிட்டபடியும் இருசக்கர வாகனத்தில் செல்ல முயன்றவர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

’விவசாய சட்டத்தை ஆதரித்த எடப்பாடி அரசு ; தமிழக விவசாயிகள் மன்னிப்புக் கேட்கிறோம்’ – பி.ஆர்.பாண்டியன்

காவல்துறையின் தடுப்புகளைத் தாண்டி செல்ல முயன்றவர்களை தடுக்க முற்பட்டதால் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன் இருதரப்பினர் இடையே மிகுந்த வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அங்கு கூடியிருந்தவர்கள் காவல்துறையினரின் கெடுபிடியைக் கண்டித்து கோஷமிட்டபடி அங்கிருந்த தடையைத் தாண்டி மீண்டும் செல்ல முயன்றதால், மீண்டும் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்தச் சட்டங்களைத் திரும்ப பெறும் வரையில் விவசாயிகள் மற்றும் அனைத்து தொழிற் சங்கங்கள் ஒருங்கிணைந்து, தமிழகத்தில் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்று இப்போராட்டத்தில் பங்கேற்ற விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. மேலும், காவல்துறையினரின் அடக்குமுறையைக் கண்டித்து தமிழக அரசுக்கு எதிராகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பி கண்டனம் தெரிவித்துள்ளனர்.

டிராக்டர்களுக்கு டீசல் தர மறுக்கும் பங்க்குகள் – விவசாயிகள் பேரணியைத் தடுக்க உ.பி., அரசு சூழச்சி

சமயபுரம் சுங்க சாவடி பகுதியில் விவசாய சட்டங்களை திரும்பப் பெறக்கோரி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடப்பதாக அறிவிக்கப்பட்ட டிராக்டர் பேரணிக்கு அனுமதிக்காததால் சாலை மறியல் செய்துள்ளனர். காவல்துறையினரின் பேச்சு வார்த்தைக்கு பின்பு மீண்டும் டிராக்டர் பேரணி சென்றுள்ளனர்.

விவசாயிகளுக்கு ஆதரவாக இருசக்கர வாகன பேரணி – காவல்துறையின் தடைகளை  உடைத்த விவசாய சங்கங்கள்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்