அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானம் தொடங்கிய பிறகு, அஞ்சநேயரின் பிறப்படம் எது என்பது தொடர்பான சர்ச்சை எழுந்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
வடக்கு கர்நாடகாவில் ஹம்பி அருகே உள்ள கிஸ்கானந்தாவில் இருக்கும் ஆஞ்சேயனத்ரி மலையில் பிறந்ததாக கர்நாடக அரசும், ஆந்திரா மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழு மலைகளில் ஒன்றான அஞ்சனாத்திரியில் பிறந்ததாக ஆந்திர அரசும் கூறிவருதால் சர்ச்சை எழுந்துள்ளது.
டிசம்பரில், ஆந்திராவில் திருமலை வெங்கடேஸ்வரா கோவிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம், நிபுணர்கள் குழு ஒன்றை அமைத்துள்ளது. வேத அறிஞர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆகியோர் அடங்கிய அந்தக் குழுவினர், ஏப்ரல் 21 ஆம் தேதி ஆஞ்சநேயரின் பிறப்பிடம் தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளனர்.
வாக்குப் பதிவின்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூடு – விசாரணை நடத்தப்படும் என மம்தா அறிவிப்பு
இந்நிலையில், கர்நாடகா மாநிலம் ஹம்பி அஞ்சேயனத்ரி மலையில், அஞ்சநேயர் பிறந்ததற்கான சான்றுகள் ராமாயணத்தில் இருப்பது தெரியவந்துள்ளது என, அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
கார்நாடக வேளாண்துறை அமைச்சர் பி.சி.பாட்டில், கர்நாடகாவில் உள்ள ஆஞ்சநேயர் பிறப்பிடம், ஹனுமான் ஜன்மாஸ்தலா என்ற பெயரில் புனிதலமாக மாற்றப்படும் என தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.