‘டூல்கிட்’ வழக்கில் தொடர்புடையதாகக் கூறி, இரு நபர்கள்மீது பிணையில் வெளிவரமுடியாத வகையில் வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்து.
வழக்கறிஞர் நிகிதா ஜேக்கப் மற்றும் இவ்வழக்கில் சம்பந்தப்பட்டவராகக் கூறப்படும் சாந்தனு என்ற நபருக்கு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
விவசாயிகள் போராட்டம் – ” கைது செய்யப்பட்ட 21 வயது மாணவி தீஷா ரவிக்கு போலீஸ் காவல் சட்ட விரோதமானது “
குடியரசு தினத்திற்கு முன்பு ட்விட்டரில் ஒரு சர்ச்சையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில், பொயட்டிக் ஜெஸ்டிஸ் (Poetic justice Foundation) அறக்கட்டளையின் நிறுவனர் மோ தலிவால், புனீத் என்ற சக ஊழியர் வழியாக, நிகிதா ஜேக்கப்பை தொடர்பு கொண்டதாகவும், இதுதொடர்பாக இருவரும் சூம் (Zoom) என்ற இணையவழி சேவையில் பேசியுள்ளதாகவும் காவல்துறையினர் குற்றஞ்சாட்டியுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.
மேலும், காவல்துறையின் சிறப்புக் குழு ஒன்று நிகிதா ஜேக்கப்பின் வீட்டிற்கு சென்றதாகவும், ஆனால் அப்போது அவரிடம் எந்தக் கேள்வியும் கேட்க முடியவில்லை என்பதால் மறுநாள் வருவதாக காவல்துறை கூறியதாகவும், பின்னர் நிகிதா ஜேக்கப்பை காணவில்லை என்றும் தகவல்கள் கூறுவதாக அச்செய்தி குறிப்பிட்டுள்ளது.
‘தீஷாவை கொலை செய்ய அழைப்பு விடுக்கும் பாஜக அமைச்சர்’ – காஷ்மீர் எழுத்தாளர் அமான் குற்றச்சாட்டு
நேற்று (பிப்ரவரி 14), பெங்களூருவைச் சேர்ந்த 21 வயதான சூழலியல் செயல்பாட்டாளர் தீஷா ரவியை டெல்லி காவல்துறை கைது செய்தது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.