Aran Sei

சிங்கப்பூரில் இரண்டு மசூதிகளை தாக்க திட்டமிட்டிருந்த இந்தியர் – உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தில் கைது

நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் தாக்குதல்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தன்று (மார்ச் 15), இரண்டு மசூதிகளைத் தாக்க திட்டமிட்டிருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டிருப்பதாக, இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி, நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் பகுதியில் பிற்பகல் 1.40 மணியளவில் அல் நூர் மசூதி மற்றும் லின்வுட் இஸ்லாமிய மையத்தில் துப்பாக்கிச்சூடு நடந்தது. வெள்ளிக்கிழமை தொழுகையின் போது நடைபெற்ற இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 51 பேர் கொல்லப்பட்டனர், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரெண்டன் டரண்ட் எனும் நபர் இந்தத் தாக்குல்களை நடத்தினார். இந்த முழுத் துப்பாக்கிச்சூட்டையும், தனது தலையின் மேல் பொருத்தப்பட்டிருந்த கேமரா மூலம் படம்பிடித்து, தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் (live) நேரடியாக ஒளிபரப்பினார்.

இதையடுத்து, பள்ளிவாசலில் இருந்த நபரின் உதவியுடன், நியூசிலாந்து காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரைக் கைது செய்தனர். துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு பள்ளிவாசலை எரித்து தரைமட்டமாக்குவதுதான் திட்டம் என விசாரணையில் பிராண்டன் டராண்ட் கூறியதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

`வலதுசாரி சித்தாந்தத்தை நம்பித் தீவிரவாதத்தில் ஈடுபட்டுள்ளார்’ – நியூலாந்து விசாரணை ஆணையம்

”இஸ்லாமிய மக்களின் குடியேற்றத்தால் மேற்கத்திய சமுதாயத்தின் இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எனும் சித்தாந்ததை நம்பி தீவிரவாதச் செயலில் ஈடுபட்டுள்ளார்” என அவரை விசாரித்த நியூலாந்து விசாரணை ஆணையம் கூறியது.

இந்நிலையில், சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 16 வயது கிறிஸ்துவ சிறுவன், கிறைஸ்ட்சர்ச் தாக்குதலின் நினைவு தினத்தன்று, இரண்டு மசூதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு, கடந்த மாதம் சிங்கப்பூர் அதிகாரிகளால் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படார். இவரை அதிகாரிகள் விசாரித்து வந்துள்ளனர்.

பிரான்ஸ் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பயங்கரவாதத்தின் பின்புலம்

விசாரணையில், கிறைஸ்ட்சர்ச்சில் பயங்கரவாத தாக்குதலின் நேரடி ஒளிபரப்பு வீடியோவைப் பார்த்திருக்கிறார் எனவும், தாக்குதல் நடத்திய வெள்ளை இனவெறியனான, ப்ரெண்டன் டாரன்டடின் அறிக்கையையும் படித்துள்ளதாக சிங்கப்பூர் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

அந்த சிறுவனின் தாக்குதல் திட்டம், முன் தயாரிப்புகள் என அனைத்தும் ப்ரெண்டன் டாரன்டடினால் ஈர்க்கப்பட்டிருப்பது என்பது ”தெளிவாக” தெரிவதாக அந்த சிறுவனை விசாரித்த அதிகாரிகள் கூறியுள்ளனர் என் இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

மங்களூர்: சிஏஏ போராட்டத்தின் ஓராண்டு நிறைவு – இன்றும் அச்சத்தில் வாழும் இஸ்லாமியர்கள்

ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ் அமைப்பின், பிரச்சார வீடியோக்களை பார்த்த அந்த சிறுவன் ஐஎஸ் அமைப்புதான், இஸ்லாத்தின் பிரதிநிதி என்று தவறான முடிவுக்கு வந்துள்ளார் என்றும் இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்கள் இஸ்லாம் மீது நம்பிக்கை வைக்காதவர்களை கொலை செய்து விடுவார்கள் என்றும் அவர் புரிந்து கொண்டுள்ளார் என உள்துறை அமைச்சகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதனால், இஸ்லாத்தின் மீதான வெறுப்பு மற்றும் வன்முறை மீதான மோகத்தால் ஈர்க்கப்பட்டிருக்கும் அந்த சிறுவன், சுயமாகவே தீவிரவாத சிந்தனையை வளர்த்துக் கொண்டிருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

துப்பாக்கியால் மிரட்டிய வலதுசாரி வன்முறையாளர் – இஸ்லாமிய பயங்கரவாதி என அவதூறு பிரச்சாரம்

அந்த சிறுவன் தன் வீட்டிற்கு அருகிலிருக்கும் அசியஃபா மசூதி மற்றும் யுசோஃப் இஷாக் மசூதிக்கு வரும் இஸ்லாமியர்களை, கத்தியின் மூலமாக தாக்க திட்டமிட்டிருந்ததாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கும்பல்நீதி ஆதிக்கம் – கண்ணை மூடிக் கொள்ளும் இந்தியர்கள்

தீவிரவாத நடவடிக்கைகள் தொடர்பான செயல்களில் ஈடுபட்டு, உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் மிகவும் இளம் நபர் இந்த சிறுவன் என, சிங்கப்பூரின் உள்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில், அதி தீவிர வலதுசாரி சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு, தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட துணிந்த முதல் நபர் இந்த சிறுவன் என சிங்கப்பூர் ஊடகங்களும் தெரிவித்துள்ளன.

அமெரிக்க அதிபர் தேர்தலில் இஸ்லாமிய வெறுப்புணர்வு

அந்த சிறுவன் தாக்குதல் நடத்திய பின்பு, உலகிற்கு வெளியிட இருந்த அறிக்கையில், இஸ்லாத்தை குறிப்பிட்டு, “வன்முறையை அமைதியின் மூலம் தீர்வு காண முடியாது” என  எழுதியிருந்ததாக சிங்கப்பூர் உள்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூரில் இரண்டு மசூதிகளை தாக்க திட்டமிட்டிருந்த இந்தியர் – உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தில் கைது

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்