சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ.3.5 உயர்த்தப்பட்டதற்கு ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
14.2 கிலோ எடையுள்ள மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை டெல்லியில் 1,003 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.விலை ஏற்றத்திற்கு முன்பு இதன்விலை ரூ.999.5 ஆக இருந்தது. அரசுக்குச் சொந்தமான எரிபொருள் சில்லறை விற்பனையாளர்களின் விலை அறிவிப்பின்படி. இந்த மாதத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இரண்டாவது முறையாக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த இரண்டு மாதங்களுக்குள் இது மூன்றாவது ஆகும்.
உ.பி: ஷாஹி இத்கா மசூதியை இந்துத்துவத்தினர் உரிமை கோரிய மனு – விசாரணைக்கு நீதிமன்றம் ஏற்பு
வர்த்தக சிலிண்டரின் விலை 60 நாட்களில் ரூ.457.5 உயர்த்தப்பட்ட பிறகு, மீண்டும் ரூ.8 உயர்த்தப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.
“ஏறத்தாழ இரண்டு கோடி குடும்பங்கள் இரண்டாவது முறையாக சிலிண்டர்களை நிரப்ப முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதன் பிறகும் மோடி அரசாங்கம் ஒவ்வொரு நாளும் விலை ஏற்றிக்கொண்டே இருப்பது தொடர்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மகிளா காங்கிரஸ் தலைவர் நெட்டா டிசோசா, “காங்கிரஸ் ஆட்சியைவிட கடந்த எட்டு ஆண்டுகளில் டீசல், பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் வரி என்கிற பேரில் மக்களின் பாக்கெட்டில் இருந்து ரூ.27.5 லட்சம் கோடியை எடுத்துள்ளது. எரிவாயு விலையேற்றத்தால் பெண்கள் பாதிக்கப்படும் போது, அவர்களது குடும்பத்தை எப்படி நடத்த முடியும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கியானவாபி மசூதி விவகாரம் – ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது ஆய்வுக்குழு
மக்களின் நலன் கருதி எரிவாயு விலையை மறுபரிசீலனை செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை வைக்க மகிளா காங்கிரஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நாடாளுமன்றத்திற்கு எதிரில் போராடியதை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
Source: The New Indian Express
கலைஞரை வசைபாடும் சாதிவெறியர்கள் | Makizhnan | Indra Kumar | Gurumoorthy | Kalaignar
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.