அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 38 குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதித்த சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக, பாஜகவின் குஜராத் மாநில கமிட்டி ட்வீட் செய்த கேலிச்சித்திரத்தை ட்விட்டர் நிர்வாகம் நீக்கியுள்ளது.
2008ஆம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கின் தீர்ப்பு தொடர்பான ட்விட்டர் பதிவுக்கு எதிராக யாரோ ஒருவர் புகார் அளித்ததையடுத்து அந்த பதிவை ட்விட்டர் நீக்கியுள்ளது என்று குஜராத் பாஜக செய்தித் தொடர்பாளர் யக்னேஷ் டேவ் தெரிவித்துள்ளார்.
அக்கேலிச்சித்திரத்தில் குள்ளா அணிந்த ஆண் தூக்கில் தொங்குவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, மூவர்ணக் கொடியும், பின்னணியில் குண்டு வெடிப்புக் காட்சியை சித்தரிக்கும் ஓவியமும், அதன் மேல் வலது மூலையில் ‘சத்யமேவ் ஜெயதே’ என்றும் எழுதப்பட்டிருந்தது.
உ.பி., வாக்காளர்களை மிரட்டிய தெலுங்கானா பாஜக எம்எல்ஏ: வழக்கு பதிந்த ஹைதராபாத் காவல்துறை
56 பேர் உயிரிழந்த இந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் 38 குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையும், 11 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் விதித்து சிறப்பு நீதிமன்றம் பிப்பிரவரி 18ஆம் தேதி தீர்ப்பளித்தது. அதற்கு மறுநாள், பிப்பிரவரி 19ஆம் தேதி, குஜராத் பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த கேலிச்சித்திரம் வெளியிடப்பட்டுள்ளது.
குஜராத் மாநில பாஜகவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளப் பக்கங்களில் இக்கேலிச்சித்திரம் காணக் கிடைக்கவில்லை.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.