வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கத்வார், டப்பல் ஆகிய 2 கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு இந்திய ராணுவம் வழங்கிய இப்தார் விருந்து புகைப்படங்களை காஷ்மீர் மற்றும் லடாக்கின் பாதுகாப்புத்துறை செய்தித்தொடர்பாளர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
#IndianArmy organised #Iftaar Milan for Line of Control Villages of Katwar and Dappal in #Macchal Sector
Bonhomie between Soldier and the Awaam at its best.#IndianArmyPeoplesArmy @diprjk @ddnewsSrinagar @ChinarcorpsIA @NorthernComd_IA #JammuAndKashmir #Kashmir #Ramazan pic.twitter.com/aKC2Swewee— PRO Defence Srinagar (@PRODefSrinagar) April 25, 2022
அந்த ட்வீட்டில் மக்களுக்கும் ராணுவத்துக்கும் இடையே உள்ள நல்லிணக்கம் சிறப்பாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
“மதச்சார்பின்மையின் மரபுகளை உயிர்ப்புடன் வைத்திருக்கும் வகையில், ஜம்முவில் உள்ள தோடா மாவட்டத்தின் அர்னோரா பகுதியில் இந்திய ராணுவத்தால் இப்தார் விருந்து நடத்தப்பட்டுள்ளது” என்று ஏப்ரல் 21 அன்று ஜம்முவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருந்தார்.
இந்த ட்வீட்டுக்கு பதிலளித்த சுதர்சன் நியூஸ் தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியர் சுரேஷ் சாவாங்கே, “இப்போது இந்திய ராணுவத்தில் கூட இந்த நோய் பரவிவிட்டதா? வருத்தமளிக்கிறது” என்று விமர்சித்திருந்தார். இதனையடுத்து அந்த ட்வீட் ஜம்முவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Source : The Print
அரசாணைக்கு பிறகும் தனியார் கட்டணம் வசூலிப்பது என்ன நியாயம்? | போராட்டத்தில் மாணவர்கள்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.