நாடு முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்துள்ள சூழலில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு அனுமதி அளிக்குமாறு அந்நிர்வாகம் சார்பில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கும், தமிழக முதல்வருக்கும் கடிதம் எழுதி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
கொரனோ சிகிச்சையில் தீவிர பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ள நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் பயன்பட்டு வருகிறது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில், ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதாக செய்திகள் வந்தவாறு உள்ளன. ஆக்சிஜன் பற்றாக்குறையால், உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
தங்களுக்கு கூடுதல் ஆக்சிஜன் சிலிண்டர்களை ஒதுக்குமாறு மத்திய அரசை மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், நீண்ட காலமாக செயற்படாமல் மூடப்பட்டுள்ள தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் ஒரு பகுதியில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்குவதற்கு அனுமதி அளிக்கவேண்டும் என்று ஸ்டெர்லைட் நிர்வாகம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின்போது, நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். அதைத்தொடர்ந்து, அந்த ஆலை மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Source : News18 Tamilnadu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.