Aran Sei

புலனாய்வு அமைப்புகளின் உதவியுடன் துக்ளக் ஆட்சி நடத்துகிறது ஒன்றிய அரசு- மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

Credit : The New Indian Express

சில அரசு அமைப்புகளின் உதவியுடன் பாஜக ஒன்றியத்தில் துக்ளக் ஆட்சி நடத்தி வருகிறது. அரசியல் கணக்கை தீர்த்துக் கொள்வதற்காக ஒன்றிய அரசின் புலனாய்வு  நிறுவனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. துக்ளக் ஆட்சியால் திரிணமூல் காங்கிரஸ் கட்சியை தடுத்து நிறுத்திவிட முடியாது” என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் ஜார்கிராமில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, “அரசு புலனாய்வு நிறுவனங்களின் உதவியுடன் பாஜக அரசு ஒன்றியத்தில் துக்ளக் ஆட்சி நடத்தி வருகிறது. துக்ளக் ஆட்சியால் திரிணமூல் காங்கிரஸை தடுத்து நிறுத்திட முடியும் என்று அவர்கள் (பாஜக) நம்பினால் அது தவறு. நாங்கள் மிகவும் வலிமையாக உள்ளோம்.

இரண்டு கோடி குடும்பங்கள் சமையல் எரிவாயு சிலிண்டரை நிரப்ப முடியாமல் தவிக்கின்றனர் – விலையேற்றத்திற்கு காங்கிரஸ் கண்டனம்

மேற்கு வங்கத்தில் பாஜக அடைந்த தோல்விக்கு பின்னரும் அவர்கள் வெட்கப்படவில்லை. 2024 நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி பற்றி கவலைப்படுகிறார்கள். அதனால்தான் இங்கு வன்முறை நடக்கிறது என்று பாஜகவினர் பொய் சொல்லி வருகிறார்கள். இவ்வளவு பெரிய மாநிலத்தில் சில இடங்களில் அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்பிருக்கிறது. அப்படி நடப்பதைக் கூட நாங்கள் விரும்பவில்லை. குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், பாஜக ஆளும் மாநிலங்களில் அங்குள்ள மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை.

அசாம்: மதிய உணவுக்கு மாட்டிறைச்சியை எடுத்து சென்ற தலைமை ஆசிரியை – மத உணர்வுகளை புண்படுத்தியதாக கைது செய்த காவல்துறை

பணியாளர்கள் தேர்வு குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. அதில், தவறு நடந்திருந்தால், தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். முந்தைய இடதுசாரிகளின் ஆட்சியில் துண்டு காகிதத்தில் பெயர் எழுதி வேலை வழங்கப்பட்டுள்ளது. விரைவில் அந்த முறைகேடுகளை வெளியிடுவேன்” என்று பேசினார்.

Source: deccanherald

Subramanian Swamy யை கேள்வி கேக்கும் தைரியம் Congress க்கு இருக்கா? Haseef

புலனாய்வு அமைப்புகளின் உதவியுடன் துக்ளக் ஆட்சி நடத்துகிறது  ஒன்றிய அரசு- மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்