Aran Sei

அமெரிக்க தேர்தல் தோல்வி: வாக்குப்பதிவு இயந்திரங்களை கைப்பற்ற  உத்தரவிட்ட டிரம்ப் – தேசிய ஆவணக் காப்பக அறிக்கை தகவல்

2020 அமெரிக்கத் தேர்தலில் தோல்வியடைந்த சில வாரங்களுக்குப் பிறகு, அமெரிக்காவின் வாக்குப்பதிவு இயந்திரங்களை உயர்மட்ட இராணுவத் தலைவர்கள் கைப்பற்றுமாறு டிரம்ப் உத்தரவு பிறப்பித்ததாகத் தேசிய ஆவணக் காப்பகத்தால் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.
ஜோ பிடன் அவர்களை அமெரிக்காவின் அடுத்த குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுத்த மக்களின் விருப்பத்திற்கு எதிராக ஆட்சியைத் தக்க வைக்க டிரம்ப் தீவிர முயற்சிகளை எடுத்துள்ளதாக அந்த அறிக்கை கூறியுள்ளது.
அமெரிக்க வரலாற்றில் இது மிகவும் பாதுகாப்பான தேர்தல் என்று என்று அமெரிக்க தேர்தல் வல்லுநர்கள் உறுதிப்படுத்திய போதிலும், முன்னாள் குடியரசுத் தலைவரான ட்ரம்ப் இந்த தேர்தலில் மோசடி நடந்துள்ளது எனப் பல மாதங்களாக தவறான தகவல்களைத் தொடர்ந்து கூறி வந்துள்ளார். ட்ரம்ப்பின் சதி வேலைகளில் வழக்கறிஞர் சிட்னி பவல் மற்றும் முன்னாள் நியூயார்க் மேயர் ரூடி கியுலியானி ஆகியோர் முக்கிய பங்காற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
ட்ரம்ப்பின் சதி வேலைகளில் வழக்கறிஞர் சிட்னி பவல் மற்றும் முன்னாள் நியூயார்க் மேயர் ரூடி கியுலியானி ஆகியோர் முக்கிய பங்காற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.
டிரம்ப்பால் நியமிக்கப்பட்ட தலைமை வழக்கறிஞர் பில் பார் இந்த தகவல்களை நிராகரித்தார். பின்பு ட்ரம்ப்பின் ஆதரவாளர்களால் வெள்ளை மாளிகை தாக்கப்பட்டதற்காக இறுதியில் டிரம்ப் பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்று தி இந்து செய்தி கூறியுள்ளது.
வழக்கறிஞர் சிட்னி பவல் மற்றும் முன்னாள் நியூயார்க் மேயர் ரூடி கியுலியானி ஆகியோர் மீது பில்லியின் டாலர் மதிப்புள்ள அவதூறு வழக்குகளை வாக்குப்பதிவு இயந்திர நிறுவனமான டொமினியன் மற்றும் ஸ்மார்ட்மேட்டிக் ஆகியவை தொடுத்துள்ளது.
Source : The Hindu 
அமெரிக்க தேர்தல் தோல்வி: வாக்குப்பதிவு இயந்திரங்களை கைப்பற்ற  உத்தரவிட்ட டிரம்ப் – தேசிய ஆவணக் காப்பக அறிக்கை தகவல்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்