திருச்சி அருகே உள்ள உத்தமர் கோயிலில் அன்னதானம் வழங்கப்படுவதில், நரிக்குறவர் சமூகத்தின் குழந்தைகள் புறக்கணிக்கப்படுவதாக அம்மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக நரிக்குறவர் குழந்தைகள் பேசும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியானது. அதில், அனைவரும் அன்னதான மண்டபத்தில் உணவு சாப்பிடும் பொழுது எங்களை மட்டும் அனுமதிக்க மறுக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த காணொளியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் கனகராஜ் ட்விட்டரில் பதிவிட்டுள்ள நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்த இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், கோயிலில் எந்த பாகுபாடும் காட்டப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். ஆனால், துறை அதிகாரிகள் முறையாக விசாரணை நடத்தவில்லை என்று சொல்லப்படுகிறது.
இது சம்பந்தமாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் –யிடம் பாதிக்கப்பட்ட ஒரு நரிக்குறவர் பேசியுள்ளனர். அதில், “நான் அன்னதான மண்டபத்தில் உணவு சாப்பிடச் சென்ற பொழுது அங்கிருந்தவர்கள் என்னை விரட்டியடித்தனர். அதனால் நான் மீண்டும் அங்கு செல்லவில்லை. ஆனால் அங்கு ஆடு மேய்த்துக் கொண்ட இருந்த குழந்தைகளுக்குப் பசியெடுத்ததால் அன்னதான மண்டபத்திற்கு வெளியே நின்று உணவு கேட்டுள்ளனர். ஆனால் கோயில் நிர்வாகம் வெறும் தண்ணீர் மட்டும் தான் கொடுத்துள்ளது. அதன் பிறகு அங்குள்ள ஒரு குழந்தை இதனை காணொளியாக எடுத்து வெளியிட்டுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
Source: The New Indian Express
Governor RN Ravi க்கு எதிராக கர்ஜித்த Tamilnadu Assembly
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.