திருநங்கையர் அனைத்து நிலைகளிலும் சம உரிமையுடன் வாழ வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தனது திருநங்கையர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 ஆம் நாளைத் திருநங்கையர் நாளெனக் கொண்டாடி வருகிறது. இதுகுறித்தான அரசாணையை கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் 11ம் தேதி தமிழக அரசு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், திருநங்கையர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின் , “திருநங்கையர் அனைத்து நிலைகளிலும் சம உரிமையுடன் வாழ வேண்டும் என்பதை நினைவூட்டும் #TransgendersDay இன்று! , திருநங்கை எனும் சொல்லுக்கு அரசின் அங்கீகாரம் அளித்து, தனி வாரியம் அமைத்தவர் தலைவர் கலைஞர்!, அவர் வழியில் திருநங்கையர்/ திருநம்பியர் உரிமைகளை திமுக என்றென்றும் காத்து நிற்கும்!” என்றும் பதிவிட்டுள்ளார்.
பெரியாரின் பெயரை நீக்கிய நெடுஞ்சாலைத்துறை: மதவெறி கூட்டத்தின் கால்பணிகிறதா அதிமுக – ஸ்டாலின் கேள்வி
திமுகவின் முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதி தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தபோது மூன்றாம் பாலினத்தவர் என்று அழைக்கப்பட்டவர்களை திருநங்கையர் என்று அழைக்கப்பட வேண்டுமென சட்டம் இயற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.