வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டிராக்டர் பேரணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறன.
இந்நிலையில், இதன் ஒரு பகுதியாக, இன்று (ஜனவரி 26) சேலத்தில் அனைத்து மத்திய தொழிற்சங்க கூட்டு இயக்கம் சார்பில் 200க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பேரணியாக வந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு்ள்ளனர்.
தடுப்புகளை மீறி டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் : தொடங்கவுள்ள டிராக்டர் பேரணி
இதைத் தொடர்ந்து, அனைவரும் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், டெல்லியில் இன்று (ஜனவரி 26) டிராக்டர் பேரணி நடைபெறுவதையொட்டி, டிராக்டர்களில் தேசியக்கொடிகளை ஏந்தி வந்து, விவசாயிகள் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
200க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டுள்ளதால், 4 அடுக்கு பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் பாதுகாப்பிற்காக வஜ்ரா வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பாக காணப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.