டெல்லியில் நடக்கும் விவசாய போராட்டத்திற்கு ஆதரவாகவும் குடியரசு தின டிராக்டர் பேரணிக்கு ஆதரவளிக்கும் வகையில் செடிகொடிகளால் அலங்கரிக்கப்பட்ட டிராக்டரில் சென்று தம்பதியினர் திருமணம் செய்துள்ளனர்.
கடந்த 60 நாட்களுக்கும் மேலாக மத்திய அரசின் விவசாய சட்டங்களைத் திரும்பபெற கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து மத்திய அரசிற்கும் போராடும் விவசாயிகளுடனான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ளன. இதனை தொடர்ந்து, குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஈடுபடுவதாக அறிவித்தனர்.
இந்நிலையில், டெல்லியில் டிராக்டர் பேரணியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே அம்பலக்காலை பகுதியைச் சேர்ந்த கட்டிட பொறியாளரான ஜெரின் டிராக்டரில் சென்று திருமணம் செய்துள்ளார். வாழை, வாழைத்தார், பலாபழம் மற்றும் வைக்கோல் உள்ளிட்ட பொருட்களால் அலங்கரிக்கபட்ட டிராக்டரில், மணமகள் பபியை ஊர்மக்களுடன் சென்று திருமணம் செய்து அழைத்து வந்துள்ளார்.
இந்திய விவசாயிகளை ஆதரித்து இலங்கையில் போராட்டம் – அதானி குழுமத்திற்கு எதிராக எழுப்பப்பட்ட முழக்கம்
இது குறித்து மணமகன் ஜெரின் கூறியதாவது, டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், குடியரசு தின டிராக்டர் பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகவும் விவசாயிகளுக்கு உதவும் டிரேக்டரில் சென்று தனது திருமணத்தை நடத்தியதாக தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.