Aran Sei

சாவர்க்கரின் சுவரொட்டிகளை தொட்டால் கைகளை வெட்டுவோம் – இந்து சேனா தலைவர் எச்சரிக்கை

ர்நாடகாவில் சாவர்க்கரின் சுவரொட்டிகளை தொட்டால் தொட்டவர்களின் கைகளை வெட்டுவோம் என இந்து சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் எச்சரித்துள்ளார்.

வலது சாரி அமைப்புகள் கர்நாடகா முழுவதும் வீர் சாவர்க்கரின் சுவரொட்டிகளை ஒட்ட முடிவு செய்தது. இந்துத்துவ சித்தாந்தவாதிகளின் சுவரொட்டிகளை மீது கை வைக்க முயற்சிப்பவர்களின் கைகளை இந்து சேனா அமைப்பைச் சேர்ந்தவர்கள் வெட்டுவார்கள் என்று  இந்து சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் எச்சரித்துள்ளார்.

பீகார்: பணி நியமனம் தாமதமானதால் போராட்டம் – போராட்டக்காரர்களைத் தாக்கிய கூடுதல் ஆட்சியர் – விசாரணைக்கு உத்தரவிட்ட மாநில அரசு

ஸ்ரீ ராம் சேனாவின் தாய் அமைப்பான ராஷ்டிரிய இந்து சேனாவின் தலைவரான பிரமோத் முத்தலிக், “நாங்கள் (சாவர்க்கர்) ஒட்டியுள்ள போஸ்டரை நீங்கள் தொட்டால், உங்கள் கைகளை வெட்டி எறிந்து விடுவோம். இது ஒரு எச்சரிக்கை.” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு மூலை முடுக்கிலும் சாவர்க்கரின் பங்களிப்புகள் மற்றும் பெருமைமிக்க பணிகள் சிறப்பிக்கப்படுவதை உறுதி செய்வோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

சமஸ்கிருதம்தான் அனைத்து மொழிகளுக்கும் தாய்மொழி – இஸ்ரோ தலைவர் கருத்து

“அவர் (சாவர்க்கர்)  இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் அல்ல; ஆங்கிலேயர்களுக்கு எதிரானவர்.  தன்னுடைய வாழ்வில் 23 ஆண்டுகளை தேசத்துக்காகப் போராட அர்ப்பணித்துள்ளார். நாங்கள் வைத்த சாவர்க்கரின் படத்தையோ அல்லது பேனரையோ இஸ்லாமியரோ அல்லது காங்கிரஸ்காரரோ தொட்டால் அவர்களின் கைகளை வெட்டுவோம். இது ஒரு எச்சரிக்கை. அவர் தனது 23 ஆண்டுகளை தேசத்துக்காகப் போராட அர்ப்பணித்துள்ளார்.

“விநாயகர் சதுர்த்தி விழா ஃப்ளெக்ஸில் பாலகங்காதர திலகர் மற்றும் வீர் சாவர்க்கரின் புகைப்படங்களைச் சேர்த்ததால், சிலர் அதை எதிர்க்கின்றனர், ஆனால் நாங்கள் அதைப் பற்றி கவலைப்படவில்லை. வீர் சாவர்க்கர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர்” என்று இந்து மகாசபா கவுரி விநாயகர் சேவா சமிதியின் தலைவர் ராகேஷ் ராமமூர்த்தி கூறியுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மீறும் டி.பி.ஜெயின் கல்லூரி: மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்காமல் வஞ்சிப்பதாக இந்திய மாணவர் சங்கம் குற்றச்சாட்டு

“மாநிலம் முழுவதும் குறைந்தது 15,000 இடங்களில் வீர் சாவர்க்கர் மற்றும் திலகரின் புகைப்படங்களை வைக்க நாங்க முடிவு செய்துள்ளோம்.சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் இயக்கமாக இதை உருவாக்க விரும்புகிறோம்” என்று இந்து சேனா  பிரமோத் முத்தாலிக் கூறியுள்ளார்.

Source: indiatoday

சாவர்க்கரின் சுவரொட்டிகளை தொட்டால் கைகளை வெட்டுவோம் – இந்து சேனா தலைவர் எச்சரிக்கை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்