பிரிட்டிஷ் அரசை காந்தி எதிர்த்துப் போராடியது போல் காந்தியை சுட்டுக்கொன்ற சித்தாந்தத்துடன் காங்கிரஸ் இன்று போராடுகிறது என ராகுல் காந்தி பேசியுள்ளார்.
கர்நாடகாவில் நான்காவது நாளான நேற்று மைசூரில் ராகுல் காந்தி தலைமையிலான பாத யாத்திரை தொடங்கியது. இந்த நடைப்பயணத்தில் ராகுல் காந்தியுடன் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் மைசூர் ஏபிஎம்சி அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தேசியத் தலைவர் ராகுல் காந்தி கொட்டும் மழையிலும் பேசினார். அப்போது பேசிய ராகுல் காந்தி, “பிரிட்டிஷ் அரசை காந்தி எதிர்த்துப் போராடியது போல் காந்தியை சுட்டுக்கொன்ற சித்தாந்தத்துடன் காங்கிரஸ் இன்று போராடுகிறது. அந்த சித்தாந்தம், சமத்துவமின்மை, பிரிவினை போன்றவற்றை ஏற்படுத்தியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இடைவிடாது மழைக்கு மத்தியில் ராகுல் காந்தி பேச்சை நிறுத்திக்கொள்வார் அல்லது குடையை பிடித்தபடி உரையை தொடர்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மழையில் நனைந்தபடியே ராகுல் காந்தி பேச்சை தொடர்ந்தபோது காங்கிரசார் ஆரவாரம் செய்தனர். பேரணியில் தன்னுடன் பங்கேற்றவருக்கும், பலத்த மழை பெய்தாலும் தனது பேச்சை கேட்டு ஆதரவு அளித்ததற்கும், காங்கிரஸ் கட்சியினருக்கு ராகுல்காந்தி நன்றி தெரிவித்தார்.
Source : hindustantimes
Seeman Latest Speech about RSS and BJP | Annamalai BJP | Modi | H Raja
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.