தமிழ்நாடு அரசின் துறைகளுக்குத் தேவைப்படும் பணியாளர்களை அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு செய்கிறது. தற்போது குரூப் 2 தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வரவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி /TNPSC). நடத்தும் Group 2 , பணியிடத்திற்காக வரும் மே 21, 2022, அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கான தேர்வு அனுமதிச் சீட்டு 11.5.2022 புதன்கிழமை அன்று மாலை வெளியிடப்பட்டது. இத்தேர்வுக்கான தேர்வு அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்யும்போது பல விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள், கட்டண சலுகை முடிவடைந்ததால், நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இப்பொருள் பற்றி, விண்ணப்பதாரர்களிடம் கேட்டபோது, சமீபகாலத்தில் டிஎன்பிஎஸ்சி-ல் பல மாற்றங்கள் கொண்டு வந்ததாகவும், OTR- ல் [one Time Registration]. புதுப்பித்தல், ஆதார் இணைப்பு, போன்ற பல்வேறு மறுசீரமைப்பால் தேர்வருக்கிடையே விண்ணப்பிக்கும்போது பல குழப்பங்கள் ஏற்பட்டதாகவும், முக்கியமாக தேர்வுக் கட்டணம் செலுத்தும்போது ’கட்டண சலுகை’ கோர விரும்புகிறீர்களா?” என்னும் Option-ல், தேர்வர்கள் கட்டண சலுகை முடிந்தும், கட்டண சலுகை Option திரையில் தோன்றியதாலும், மேற்கொண்டு Option-“ஆம்” என்று கொடுக்கும் பட்சத்தில் எவ்வித முன்னறிவுப்புமின்றி (alert) விண்ணப்பம் ஏற்கப்பட்டதே மேற்கண்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கு காரணம் என்று சொல்லப்பட்டது. இந்நேர்வுக்கு டிஎன்பிஎஸ்சி-ன் தொழில்நுட்பக் கோளாறே காரணமாகும்.
தேர்வர்கள் பல வருடங்களாக இத்தேர்வுக்காக தங்களை ஆயத்தம் செய்தும் தேர்வு அனுமதிச் சீட்டு பெறப்படாதது தேர்வர்களிடையே மிகுந்த கவலையை உருவாக்கியுள்ளது.
இது குறித்து அரண்செய்யிடம் பேசிய தேர்வர், “டிஎன்பிசி தேர்வுகளில் மூன்று முறை கட்டண சலுகையைப் பயன்படுத்த முடியும். சலுகையைப் பயன்படுத்தியப் பிறகு அறிவிப்பு (alert) வரும். தற்போது அறிவிப்பு வராததே சிக்கலுக்கு காரணமாக இருக்கிறது. குரூப்- 4, 2022 விண்ணப்பிக்கும்போது இதே குழப்பங்கள் ஏற்பட்டதால் கட்டண சலுகை கோரி உள்ள மாணவர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்” என்று தெரிவித்தார்.
கொரோனா நோய் காரணமாக 2019 இல் இருந்து டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடைபெற வில்லை தற்போது டிஎன்பிசி- இன் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தேர்வு நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்ய இயலாததால் தேர்வர்கள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
தற்போது குரூப் 4 விண்ணப்ப தேர்வர்கள் EDIT/ Payment – Option தரும் பட்சத்தில் தேர்வர்களுக்கு இடையே மேற்கண்ட குறைகள் நிவர்த்தி செய்ய வழிவகை ஏற்படும். குரூப் 4 ஹால் டிக்கெட்டை எவ்வித குழப்பமுமின்றி பதிவிறக்கம் செய்ய ஏதுவாக இருக்கும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இலங்கையில் நடப்பது இது தான்? | Tu Senan Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.