தமிழக அரசின் அனுமதியைக் கோராமல், தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஆந்திரா மற்றும் தெலங்கானாவிற்கு மத்திய அரசு அனுப்பியதாக குற்றஞ்சாட்டியுள்ள தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், தமிழக சூழலைக் கருத்தில் கொண்டு செயற்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஐநாக்ஸ் ஆலைதான் சென்னையில் உள்ள மருத்துவமனைகளுக்குத் தேவையான ஆக்சிஜனை வழங்கி வருகிறது. மத்திய அரசு உத்தரவின்படி, அந்த ஆலையில் இருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஆந்திரா மற்றும் தெலங்கானாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் பேசிய அவர், “தமிழக அரசிடம் முறையான அனுமதியை வாங்காமல் இது நடந்துள்ளது. தமிழகத்தில் நிலவும் இக்காட்டான இச்சூழலை மத்திய அரசு கவனத்தில் கொண்டு செயற்பட்டிருக்க வேண்டும். இவ்விவகாரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்.” என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றின் எண்ணிக்கை தமிழகத்தில் 79 ஆயிரமாகவும், ஆந்திராவில் 53 ஆயிரமாகவும், தெலங்கானாவில் 42 ஆயிரமாகவும் உள்ளது. தமிழகத்திற்கு தினமும் சராசரியாக 200 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. இந்தத் தேவையானது, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.