Aran Sei

தமிழ்தேச முக்கள் முன்னணியின் பாலன் கைது – மாவோயிஸ்டின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டதால் நடவடிக்கை

மிழகத்தில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ், தமிழ்தேச மக்கள் முன்னணி கட்சியின் பொதுச் செயலாளர் பாலன், அக் கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர் சீனிவாசன் ஆகியோர், சேலம் மாவட்டட காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2019 நவம்பர் மாதம், மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த மாணிக்கவாசகம் என்பவரின் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியதற்காக, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இவ்விருவர் மீதும்  வழக்குப் பதியப்பட்டிருந்ததாகவும், அதன் பின்னணியில் தற்போது  சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக, தமிழ்த் தேச மக்கள் முன்னணியின் தலைவர் மீ.த.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

`பழங்குடியின மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்தால் மாவோயிஸ்டா?’ – பள்ளி ஆசிரியைக் கைது

இது தொடர்பாக அறிக்கையில், ”தோழர்களின் சாவு, இறுதி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கெல்லாம் வழக்கா? முழக்கமிட்டதற்காக இதே போன்று இன்னொரு வழக்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைமைக்குழுத் தோழர்கள் சதீஷ், அருண்சோரி ஆகியோருக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளது. ஞாயிறு அதிகாலை கைது செய்து தோழர்கள் பாலன், கோ.சீனிவாசன், அனுப்பூர் செல்வராஜ் மூவரையும் சிறை வைக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘சுதந்திரம் பறிக்கப்படுவதைத் தவிர வேறு சிக்கலைச் சந்திக்கவில்லை’ – உமர் காலித்

”எடப்பாடி அரசுக் காவல்துறையின் அடாவடிச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம். தோழமையாகத் தோழர்களின் இறப்பு நிகழ்வுகளில் கலந்து கொள்பவர்கள்மீது வழக்குப் பதிவு செய்வது அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் மனிதாபிமானமற்ற செயலாகும். கைது செய்யப்பட்ட தோழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” என்று அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

`ஸ்டேன் சாமி நிரபராதி’ – அருட் தந்தைகள் ஆதரவு

மேலும் ”பாசிச பாசக எதிர்ப்பில் முன் நிற்கும் அமைப்புகள்,  தலைர்களைக் கைது செய்யும் வேலையைத் தொடங்கி விட்டனர். திட்டமிட்டு UAPA வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழ்த்தேச மக்கள் முன்னணி பொதுச்செயலாளர் தோழர் பாலன், தோழர் கோ.சீ உள்ளிட்ட தோழர்களை விடுதலை செய்! தோழர் மணிவாசகம் இறப்பில் போடப்பட்ட மூன்று (FIR) வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறோம்” என்று தமிழ்தேச மக்கள் முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்தேச முக்கள் முன்னணியின் பாலன் கைது – மாவோயிஸ்டின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டதால் நடவடிக்கை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்