Aran Sei

‘இம்மண்ணில் இருந்து யாரும், யாரையும் துரத்திவிட முடியாது’ – சிஏஏ குறித்து இஸ்லாமியர்களிடம் முதல்வர் பழனிசாமி உறுதி

ந்த மண்ணில் இருந்து யாரும் யாரையும் துரத்திவிட முடியாது என்றும், இந்த மண்ணில் பிறந்த அனைவருக்கும் இங்கு வாழ்வதற்கான உரிமை உண்டு என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இஸ்லாமிய ஜமாத் உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இரண்டு நாள் தேர்தல் பிரச்சாரத்தில், தமிழக முதல்வரும் அதிமுக முதல்வர் வேட்பாளருமான எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு வருகிறார். இன்று (ஜனவரி 23) அதன் ஒரு பகுதியாக, பொத்தனூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில், அனைத்து ஜமாத் கூட்டமைப்பைச் சேர்ந்த 100 பேரை சந்தித்து பேசியுள்ளார்.

‘சிஏஏ-என்ஆர்சி-க்கு எதிராக போராடுபவர்களை வேட்டையாடுகிறார்கள்’ – கேம்பஸ் ஃப்ரண்ட் குற்றச்சாட்டு

அப்போது, “மத்திய அரசு கொண்டுவந்த சில சட்டங்கள் (குடியுரிமை திருத்தச் சட்டம்) குறித்து சில இஸ்லாமியர்கள் பயப்படுகிறார்கள். இங்கிருந்து யாரும் யாரையும் துரத்திவிட முடியாது. இந்த மண்ணில் பிறந்த அனைவருக்கும் இங்கு வாழ்வதற்கான உரிமை உண்டு.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், “ஹஜ் புனித யாத்திரைக்கான அரசின் ஆண்டு மானியத்தை ரூ.6 கோடியிலிருந்து ரூ.10 கோடியாக தமிழக அரசு உயர்த்தியிருக்கிறது. சமீபத்தில், பெய்த கனமழையால் சேதமடைந்த நாகூர் தர்காவில் உள்ள ஏரியை சீரமைக்க ரூ.5.37 கோடி ஒதுக்க தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது. மேலும், ஹஜ் யாத்ரீகர்கள் தங்குவதற்கான விடுதி விரைவில் சென்னையில் கட்டப்படும்.” என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜமாத்தார்களிடம் உறுதியளித்துள்ளார்.

‘இம்மண்ணில் இருந்து யாரும், யாரையும் துரத்திவிட முடியாது’ – சிஏஏ குறித்து இஸ்லாமியர்களிடம் முதல்வர் பழனிசாமி உறுதி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்