Aran Sei

திருவண்ணாமலை: 70 ஆண்டுக்கால போராட்டத்திற்கு பிறகு முத்துமாரியம்மன் கோயிலில் நுழைந்து வழிபட்ட பட்டியலின மக்கள் – மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை

திருவண்ணாமலை மாவட்டம் தென்முடியனூர் கிராமத்தில் பழமையான முத்துமாரியம்மன் கோயிலில் 70 ஆண்டுக்கால போராட்டத்திற்கு பிறகு, மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் இன்று (30-ம் தேதி) பட்டியலின மக்கள் நுழைந்து வழிபாடு செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தென்முடியனூர் கிராமத்தில் பழமையான முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் தை மாதம் நடைபெறும் திருவிழாவில் பொங்கலிட்டு வழிபடவும் அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் வழிபாடு செய்ய, பிற சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

புதுக்கோட்டை: “சாதிய தீண்டாமை கடைபிடிப்பவர்களுக்கு கடும் தண்டனை” – மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு எச்சரிக்கை

முத்துமாரியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யவும், பொங்கலிட்டு வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் பட்டியலின மக்கள் வலியுறுத்தினர். அவர்களுக்கு ஆதரவாக இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் ஒரு சில அமைப்புகள் குரல் எழுப்பியது. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பட்டியலின மக்கள் மனு அளித்திருந்தனர். அதில், முத்துமாரியம்மன் கோயிலில் தரிசனம் செய்ய அனுமதி வழங்க வேண்டும், தை மாத விழா காலங்களில், எங்களது சமூகத்துக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

முத்துமாரியம்மனை தரிசனம் செய்த பட்டியலின மக்களுடன் ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள்.இது தொடர்பான பேச்சுவார்த்தை கோட்டாட்சியர் மந்தாகினி தலைமையில் நடைபெற்றது. அப்போது, முத்துமாரியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என பட்டியலின மக்களும் மற்றும் அவர்களை தரிசனம் செய்ய அனுமதிக்கக் கூடாது என பிற சமூகத்தினரும் வலியுறுத்தி உள்ளனர். இதில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி, இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான முத்துமாரியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பட்டியலின மக்களுக்கு உரிமை உள்ளது, அவர்கள் தரிசனம் செய்யலாம் என முடிவெடுக்கப்பட்டது.

தஞ்சாவூர்: இரட்டை குவளை முறை, முடி திருத்தம் செய்யக் கூடாது, மளிகை பொருள் வழங்க கூடாதென பட்டியலின மக்களிடம் தீண்டாமையை கடைப்பிடிக்கும் ஆதிக்க சாதியினர்

இதையடுத்து, தீண்டாமை ஒழிப்பு உறுதி ஏற்கப்படும் மகாத்மா காந்தி நினைவு நாளான ஜனவரி 30-ம் தேதி (இன்று), முத்துமாரியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் சுவாமி தரிசனம் செய்ய பட்டியலின மக்கள் முடிவு செய்திருந்தனர். இதனையொட்டி தென்முடியனூர் கிராமத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

வேலூர் டிஐஜி முத்துசாமி, ஆட்சியர் பா.முருகேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கார்த்திகேயன் (திருவண்ணாமலை), பாலகிருஷ்ணன்(திருப்பத்தூர்), இந்து சமய அறநிலையத் துறை மண்டல இணை ஆணையர் அசோக்குமார், கோட்டாட்சியர் மந்தாகினி ஆகியோர் முன்னிலையில் பூ மாலை உள்ளிட்ட பூஜை மற்றும் பொங்கல் வைப்பதற்கான பொருட்களுடன் முத்துமாரியம்மன் கோயிலில் நுழைந்தனர். பின்னர் அவர்கள், பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். இதன்மூலம் 70 ஆண்டு கோரிக்கை நிறைவேற்றப்பட்டதாக பட்டியலின மக்கள் உருக்கமாக தெரிவித்தனர்.

இது குறித்து பேசிய மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், “தென்முடியனூரில் 70 ஆண்டுகள் பழமையான முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் பொங்கல் திருநாளையொட்டி 15 நாட்கள் நடைபெறும் விழாவில், ஒவ்வொரு நாளும் ஒரு பிரிவினர் பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். இந்தாண்டு பொங்கல் வைத்து வழிபாடு செய்ய பட்டியலின மக்கள் அனுமதி கேட்டிருந்தனர். அதன்படி, பொங்கல் வைத்து வழிபாடு செய்ய மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது.

தமிழகத்தில் தீண்டாமை: மதுரை மாவட்டம் முதலிடம் – ஆர்டிஐ தகவல்

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி அனைவரும் சமம் என்ற வகையில், நமது மாவட்டத்தில் 13 சமத்துவபுரம் உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து வகையிலும் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் அனைவரும் பழக வேண்டும். இரு பிரிவினரிடையே கருத்து வேறுபாடு நிலவிய நிலையில், மாவட்ட நிர்வாகம் மூலம் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு எட்டப்பட்டுள்ளது. முத்துமாரியம்மன் கோயிலில் பட்டியலின மக்கள் பொங்கலிட்டு வழிபட்டுள்ளனர்” என்று கூறினார்.

LIC-க்கு பாடை கட்டிய அதானி | வீணாய் போன மோடியின் உழைப்பு | Aransei Roast | BJP | Modi | Adani | BBC

திருவண்ணாமலை: 70 ஆண்டுக்கால போராட்டத்திற்கு பிறகு முத்துமாரியம்மன் கோயிலில் நுழைந்து வழிபட்ட பட்டியலின மக்கள் – மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்