அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தைப் பற்றி அவதூறாக செய்தி வெளியிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ், தற்போது அதற்காக மன்னிப்பு கேட்டுள்ளது.
கடந்த 2007 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், அபிஷேக் குமார் சிங் எனும் பத்திரிகையாளர் ”மிட்டாய்கள் போல விற்கப்படும் பட்டப்படிப்பு” எனும் தலைப்பில், அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தை விமர்சித்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.
அந்த கட்டுரையில் ”விடுதிகள் குண்டர்களின் இருப்பிடம் ஆகிவிட்டது. அரசியல் மற்றும் கும்பல்களுக்கிடையில், படிப்பு இரண்டாம் பட்சம் ஆகிவிட்டது. தவறான நிகழ்வுகளுக்காக எப்போதும் செய்திகளில் இடம்பெறும் இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகமான அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்துக்கு வரவேற்கிறேன்” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பிரதமரை விமர்சித்து ட்வீட் – பணிநீக்கம் செய்யப்பட்ட கோ ஏர் நிறுவன பைலட்
மேலும், ”இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள், தங்கள் ஆய்வறிக்கைகளை அருகிலிருக்கும் ஷம்ஷத் சந்தையிலிருந்து பெற்றுக் கொள்கிறார்கள். அந்த ஆய்வறிக்கைகளை யாரும் சரிபார்ப்பதில்லை. பட்டப்படிப்பு, மிட்டாய்கள் போல விற்கப்படுகிறது” என அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் பெயர் குறிப்பிட விரும்பாத, மூத்த பேராசிரியர் தெரிவித்துள்ளதாக அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
“மன்னிப்பு கேட்க முடியாது (போடா)” – நகைச்சுவை கலைஞர் குனால் கம்ரா
டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியான இந்த கட்டுரையை எதிர்த்து, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் சட்டத்துறை மாணவரும் (தற்போது வழக்கறிஞர்), மாணவர் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளருமான ஃபரூக் கான், டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
சம்பளம் வழங்காததால் தொழிற்சாலையில் கலவரம் – தொழிலாளர்களிடம் மன்னிப்பு கோரிய ஆப்பிள் நிறுவனம்
இந்நிலையில், டைம்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனம், 2007 ஆம் ஆண்டு, செப்டம்பர் 29 ஆம் தேதி வெளியிட்ட கட்டுரைக்காக, 14 ஆண்டுகள் கழித்து தற்போது மன்னிப்பு கேட்டுள்ளது. “நீதி கிடைப்பதை தாமதிக்கலாம், ஆனால் தடுக்க முடியாது” என டைம்ஸ் ஆஃப் இந்தியா மன்னிப்பு கேட்டுள்ளது தொடர்பாக ஃபாரூக் கான் கருத்து கூறியுள்ளார்.
நீதிபதிகள் குறித்த சர்ச்சை பேச்சு – மன்னிப்பு கோரிய ‘துக்ளக்’ குருமூர்த்தி
அந்த கட்டுரை, தன்னை மிகவும் புண்படுத்தியதாக கூறியுள்ள ஃபாரூக் கான், ”அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தைப் பற்றி பரப்பப்படும் அவதூறான பிரச்சாரத்துக்கு, ஃபாசிச பாரதிய ஜனதா கட்சி மட்டும் காரணமில்லை, தாராளாவதிகள் எனும் கூறிகொள்ளும் நபர்களும் தான்” என தி வயர் இணையதளத்திடம் தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.