Aran Sei

ஒலிம்பிக் போட்டிக்கு எதிர்ப்பு – திபெத்திய செயற்பாட்டாளர்கள் உண்ணாவிரதம்

சீனா தலைநகர் பெய்ஜிங்கில் தொடங்கியுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து திபெத்திய செயற்பாட்டாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

ஐந்து முக்கிய திபெத்திய அமைப்புகளான திபெத் விடுதலைக்கான மாணவர்கள் அமைப்பு, திபெத்திய இளைஞர் காங்கிரஸ், திபெத்திய மகளிர் சங்கம், திபெத்தின் தேசிய ஜனநாயகக் கட்சி மற்றும் திபெத்தின் முன்னாள் அரசியல் கைதிகளின் சங்கம் கூட்டாக இணைந்து நடத்தியுள்ள இந்த ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில், திபெத்தில் திபெத்தியர்கள்மீது நடத்தப்பட்ட அப்பட்டமான மனிதஉரிமை மீறல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கடுமையான குளிருக்கு இடையில், இந்த அமைப்புகளைச் சேர்ந்த திபெத்திய செயற்பாட்டாளர்கள் மத்திய திபெத்திய நிர்வாகத்தின் தலைமையகம் அமைந்துள்ள ஹிமாசல் பிரதேச மாநிலம் மெக்லியோகாஞ்ஜில் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

‘இலங்கையிலிருந்து இந்தியாவை வளைக்கும் சீனா’ : என்ன செய்யப் போகிறது ஒன்றிய அரசு என ராமதாஸ் கேள்வி

உலகெங்கிலும் உள்ள திபெத்தியர்கள் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருவதோடு, அதை புறக்கணிக்குமாறு சர்வதேச சமூகத்தை கோரி வருகின்றனர்.

திபெத் விடுதலைக்கான மாணவர்கள் அமைப்பைச் சேர்ந்த செயற்பாட்டாளர் டென்சின் லோப்சங் கூறுகையில், “சீனாவிற்குள் நடக்கும் இனப்படுகொலை விளையாட்டுகளை இந்த உலகமே பார்க்கப் போகிறது. இதுபோன்ற பெரிய நிகழ்வை நடத்த சீனாவுக்கே தகுதி இல்லை. ஒலிம்பிக்கின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழாவில் இந்தியா பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளதாக அறிந்தோம். இது எங்களுக்கு மட்டுமல்ல, அனைத்து மனிதஉரிமை நம்பிக்கையாளர்களுக்கும் நல்ல செய்தி. இந்த முடிவுக்கு நாங்கள் நன்றி தெரிவித்து வரவேற்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

Source: PTI

ஒலிம்பிக் போட்டிக்கு எதிர்ப்பு – திபெத்திய செயற்பாட்டாளர்கள் உண்ணாவிரதம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்