Aran Sei

பாஜக ஆளும் ம.பி.யில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மூன்று வயது குழந்தை – குற்றஞ்சாட்டப்பட்டவர் கைது

பாஜக ஆளும் மத்தியபிரதேச மாநிலம் போபால் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் நர்சரி வகுப்பு பயிலும் 3 வயது கொண்ட சிறுமியை  பள்ளியின் பணியாற்றும் வாகன ஓட்டுனர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பள்ளியில் இருந்து வீடி திரும்பிய சிறுமியின் உடை மாற்றப்பட்டிருந்தது. மாற்று உடையை யார் சிறுமிக்கு அணிந்து அனுப்பியுள்ளனர். இதனால், சந்தேசமடைந்த சிறுமியின் தாயார் இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேட்டுள்ளார்.

ராகுல்காந்தியின் பாதயாத்திரை கேரளாவில் 18 நாட்கள், உ.பி.யில் 2 நாட்கள்: பாஜகவை எதிர்த்துப் போராடுவதற்கான வித்தியாசமான வழி – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனம்

அப்போது, பள்ளியில் வைத்து சிறுமியின் உடையை யாரும் மாற்றவில்லை என கூறியுள்ளனர். அப்போது, சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்துள்ளனர். அதில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான தடயங்கள் இருந்துள்ளன.

தனது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார் என்பதை அறிந்து சிறுமியின் தாயார் இது குறித்து சிறுமியிடம் கேட்டுள்ளார்.

சேலம்: ‘நாங்க கோயிலுக்குள்ள போகக்கூடாதா?’ – 40 ஆண்டுகளாக போராடி உரிமையை மீட்டெடுத்த பட்டியலின மக்கள்

நர்சரி வகுப்பு பயின்று வரும் அந்த சிறுமியை பள்ளி வேன் டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. சிறுமியை பள்ளி வேனில் வைத்து டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்ததுள்ளார்.

சொந்த தொகுதியில் கூட வெற்றிப்பெறாத அண்ணாமலை தான் மு.க ஸ்டாலின் ஆட்சியை கவிழ்க்க போகிறாரா? – தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் கிண்டல்

இது குறித்து சிறுமியின் தாயார் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி வேன் டிரைவரை கைது செய்துள்ளனர். பள்ளி வேனில் வேலை செய்த பெண் ஊழியரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Source: timesofindia

Why Journalist Savithri Kannan was arrested ? Kallakurichi Case Latest update | Karthik Pillai K Tv

பாஜக ஆளும் ம.பி.யில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மூன்று வயது குழந்தை – குற்றஞ்சாட்டப்பட்டவர் கைது

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்